வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அந்த ஒரு விஷயத்தில் தான் ஜாதி கிடையாது.. வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் ஆடியோ லான்ச் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் பேசிய விஷயங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்த டிரெண்டாக்கி வருகிறார்கள். எங்க பார்த்தாலும் இப்போது வாரிசு படத்தை பற்றிய பேச்சு தான்.

வாரிசு படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது. இப்போது நேற்று நடந்த ஆடியோ லான்ச் தான் விஜய் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Also Read : 32 வருஷமா விஜய்க்கு போட்டி இவர்தான்.. வாரிசு ஆடியோ லான்ச்சில் தெறிக்க விட்ட பேச்சு

எப்போதுமே அரசியல் பற்றி பேசும் விஜய் இந்த முறை அரசியல் பக்கம் செல்லவில்லை. இதற்கு மாறாக அன்பு, வளர்ச்சி என்று இந்த பாதையை தேர்ந்தெடுத்து பேசி இருந்தார். ஒருவேளை வாரிசு படம் சென்டிமென்ட் கதையில் எடுத்துள்ளதால் இவ்வாறு பேசி உள்ளார் போல.

அதுமட்டுமின்றி விஜயின் காரசாரமான பேச்சுகளில் சாதியை பற்றியும் பேசி உள்ளார். அதாவது ரத்தத்தில் மட்டும் தான் ஜாதி, மத வேறுபாடு இல்லை. அதில் ஏழை பணக்காரன் என்றும் கிடையாது, மனிதர்களால் மட்டும் தான் இவை எல்லாம் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் ரத்தத்தில் இருந்து நாம் ஒற்றுமையை கற்றுக் கொள்ள வேண்டும்.

Also Read : வாரிசு ஆடியோ லாஞ்சில் பங்கேற்க போகும் 2 முக்கிய புள்ளிகள்.. இப்பவே ப்ரமோஷனை ஆரம்பித்த தளபதி

இதற்காக தான் தனது ரசிகர்களுக்கு எப்போதுமே இரத்ததானம் செய்வதை ஊக்குவித்து வருவதாக விஜய் கூறி உள்ளார். இவ்வாறு விஜயின் அனல் பறக்கும் பேச்சுக்கு கைதட்டல் பறந்தது. ரத்தத்தை எடுத்துக்காட்டாக வைத்து ரசிகர்களின் ஒற்றுமையை அழகாக புரிய வைத்துள்ளார் விஜய்.

அதுமட்டுமின்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த வகையில் என்னை உருவாக்கிய உளிகளான ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகள் என்று விஜய் கூறியிருந்தார். மேலும் வாரிசு படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

Also Read : வாரிசு படத்தை தயாரித்துவிட்டு அல்லல்பட்டு வரும் தயாரிப்பாளர்.. பேசாம வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம்

Trending News