வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஜோடி போட வாய்ப்பு இல்ல, யாஷுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா.. நேஷனல் அவார்டுக்கு அடி போடும் டாக்ஸின் கதை

Nayanthara and Yash: நயன்தாராவுக்கு என்னதான் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும் தற்போதும் இவருடைய அழகுக்கும் ஸ்டைலுக்கும் போட்டி போட எந்த நடிகையும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப தான் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். அதனால் தான் இவரை விட 5 வயது கம்மியாக இருக்கும் கவினுக்கு ஜோடியாக நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார்.

இதற்கிடையில் மண்ணாங்கட்டி, டெஸ்ட் போன்ற பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடிக்கும் ஹீரோயின்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி இருக்கும் சமயத்தில் கேஜிஎஃப் ஆக்டர் யாசுக்கு அக்காவாக கமுக்கமாக நடித்து வருகிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் 5 வயசு குறைவா இருக்க கவினுக்கே ஜோடியாக நடிக்கும் பொழுது, ஒரு வயது தானே யாசுக்கு கம்மி ஏன் ஜோடியாக நடிக்க கூடாது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

20 கோடி சம்பளத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த நயன்தாரா

ஆனால் நயன்தாராவுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை எனக்கு சம்பளம் தான் டார்கெட். அது கிடைத்துவிட்டால் நான் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயார் என்பதற்கு ஏற்ப யாசுக்கு அக்காவாக நடிப்பதற்கு 20 கோடி சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி இருக்கிறார். இவர் கேட்ட சம்பளத்தை கேட்ட பட குழுவினர் இதெல்லாம் கட்டுப்படியாகாது என்று நடிகை தபு பக்கம் திரும்பினார்கள்.

ஆனால் இதில் நயன்தாரா நடித்த வியாபார ரீதியாக படம் பிச்சுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் கேட்கிற சம்பளத்தை கொடுத்து விடலாம் என்று கடைசியில் நயன்தாராவை லாக் செய்து விட்டார்கள். இதனை தொடர்ந்து யாஷுக்கு இப்படத்தில் ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு நடிகைகள் கமிட்டாய் இருக்கிறார்கள். ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் கியாரா அத்வானி இன்னொரு நடிகை தாரா சுதாரி. மேலும் இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஹூமா குரேசி நடிக்கிறார்.

இப்படி இவர்கள் கமிட்டாகி இருக்கும் படத்தை நல தமயந்தி படத்தில் நடித்த நடிகை மற்றும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். அந்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது. பெண்களை ஓர் இடத்தில் அடைக்கப்பட்டு சித்திரவதை படும் அவர்களை யாஷ் காப்பாற்றும் விதமாக கதை இருக்கப் போகிறது. இப்படத்திற்கு டாக்ஸிக் என பெயரிட்டு நேஷனல் அவார்டு வாங்கும் அளவிற்கு கதை இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக பார்த்து பார்த்து பண்ணுகிறார்கள். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது.

கவினுக்கு ஜோடி சேர்ந்த நயன்தாரா

Trending News