திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 67-ல் விஜய்க்கு முக்கியத்துவம் இல்லையாம்.. லோகேஷ் போட்டிருக்கும் ஸ்கெட்ச்

தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் நடித்து வருகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் விஜய், திரிஷா இருவரையும் தாண்டி வில்லன்களுக்கு தான் அதிக முக்கியத்துவத்தை லோகேஷ் கொடுத்துள்ளாராம். அதாவது தளபதி 67 படத்தை லோகேஷ் எடுக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியான போதே பல பிரபலங்களின் பெயர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அடிபட்டது.

Also Read : காஷ்மீரில் திண்டாடும் விஜய்.. தளபதி 67க்கு போட்ட ஸ்கெட்ச் எல்லாம் கோவிந்தா!

அதன் பின்பு சில பிரச்சனைகளால் ஒவ்வொருவரும் விலகியதாகவும் தகவல் வெளியானது. அதன்படி இப்போது சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின் போன்ற பலர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார்களாம். இவர்களின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் லோகேஷ் செதுக்கி உள்ளாராம்.

ஏற்கனவே லோகேஷ் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் முதல் பாதியில் கமலை பற்றி கதை நகர்ந்தாலும் ஒரு காட்சியில் கூட அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி கமலையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மலையாள நடிகர் பகத் பாசில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.

Also Read : தளபதி 67 கதையை செதுக்கி வைத்திருக்கும் லோகேஷ்.. ஆங்கில பட தழுவலாக இருந்தாலும் வேற லெவல்

மேலும் லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்திலும் தளபதி விஜய்யை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது. இவ்வாறு லோகேஷின் முந்தைய படங்களில் ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

அதிலும் தளபதி 67 படத்தில் வில்லன்கள் பட்டாளமே நடிப்பதால் விஜய்யின் கேரக்டர் எந்த அளவுக்கு இருக்கும் என்று தெரியவில்லை. மேலும் லோகேஷிடம் கதையைக் கேட்காமலே விஜய் ஒத்துக் கொண்டார் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது. பீஸ்ட், வாரிசு என இணையத்தில் ஏற்பட்ட மோசமான விமர்சனங்களால் ஒரு தரமான வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் லோகேஷனை விஜய் இறங்கி உள்ளார்.

Also Read : லோகேஷ் இதுவரை வசூலில் வேட்டையாடிய 3 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பும் தளபதி 67 ப்ரீசேல் பிசினஸ்

Trending News