Sundar-C fighting with Red Giant: தற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களை எல்லாம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் திரையரங்குகளில் வெளியிடுகிறது. தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களை இந்நிறுவனம் தான் வெளியிடுவதால் இப்போது திரையுலகில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அசுர வளர்ச்சியடைந்து இருக்கிறது.
அதிலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு உதயநிதி சொல்வது தான் வேத வாக்கு. இப்படிப்பட்ட நிலையில் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி தன்னுடைய படத்தின் ரிலீசுக்கு முன்பே ரெட் ஜெயன்டுடன் சண்டை போட்டுள்ளார். ஆனால் அது இப்போது பிரயோஜனமே இல்லாமல் போய்விட்டது. ஹாரர்- காமெடி ஜானரில் சீசன் ஆக சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் அரண்மனை திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து 2016ல் அரண்மனை 2 வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2021ல் இந்த படத்தின் மூன்றாம் பாகமும் வெளியானது. இப்போது நான்காம் பாகம் 2024ல் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய நாள் குறித்தனர். இந்தப் படத்தையும் சுந்தர் சியே இயக்குகிறார்.
ரிலீசுக்கு முன்பே இவ்வளவு அக்கப்போரா!
இவருடன் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி படத்திற்கு இசையமைக்கிறார். அரண்மனை 4 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதால் தியேட்டர்களில் அதிக ஸ்கிரீனிங் ஒதுக்கப்பட வேண்டும் என்று உதயநிதியுடன் மல்லுக்கட்டினார்.
ஆனால் இப்போது அரண்மனை 4 இன்னும் ரெடி ஆகவே இல்லை. படத்தில் இன்னும் விஎஃப்எக்ஸ் (VFX) வொர்க் அப்படியே இருக்கிறதாம். அதனால் இப்போதைக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போட்டு இருக்கின்றனர். இப்போது மொத்த பழியும் VFX டீம் மேல போட்டுவிட்டார்கள். படத்தின் ரிலீசுக்கு முன்பே துண்டைப் போட்ட சுந்தர் சி, இப்போ சைலன்ட் ஆக இருக்கிறாராம்.
ஆனால் பொங்கலுக்கு அரண்மனை 4 ரிலீஸ் ஆகாவிட்டாலும் 4 டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், சீயான் விக்ரமின் தங்கலான் போன்ற படங்கள் வெளியாகிறது.