வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாய்க்கிழிய பேசின பேச்சுக்கும் படத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.. மண்ணை கவ்விய மாமன்னன்

Maamannan: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் கடைசி படமாக உருவான மாமன்னன் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் வெளியான நாளில் பகத் பாசில், வடிவேலுவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் தற்போது படத்தின் மீது இருந்த ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பட குழுவினர் ஓவராக படத்தை புகழ்ந்து தள்ளி ப்ரமோஷன் செய்தனர். அது மட்டுமல்லாமல் தேவர் மகன் இசக்கி தான் இந்த மாமன்னன் என மாரி செல்வராஜ் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். மேலும் கமல் முன்பாகவே அப்படம் பற்றிய தேவையில்லாத விஷயங்களையும் பேசி சர்ச்சையாக்கினார்.

Also read: உருவ ஒற்றுமையிலும் பகத் பாசிலுக்கு டஃப் கொடுத்த வில்லன்.. நடிப்பிலும் மிரட்டும் பீஸ்ட் பட நடிகர்

இதுவே படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து முதல் நாளில் படத்திற்கான கூட்டமும் இருந்தது. ஆனால் படம் பார்த்த அனைவரும் சொல்லும் ஒரே விஷயம் தேவர்மகனுக்கும் இப்படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தான். அது மட்டுமல்லாமல் ஆஸ்கர் நாயகனான ஏ ஆர் ரகுமானை இப்படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறுகின்றனர்.

மேலும் உதயநிதியின் நடிப்பும் பெரிய அளவில் எடுபடவில்லை. அதேபோன்று ஏஜென்ட் அமராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பகத் பாசிலின் கதாபாத்திரம் சொதப்பப்பட்டிருக்கிறது. இப்படி படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது.

Also read: அடுத்த தலைமுறை ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ்.. மாமன்னனில் கவனிக்கப்பட வேண்டிய 3 விஷயங்கள்

அது மட்டும் இன்றி நடிகையர் திலகம் மூலம் தேசிய விருதை பெற்ற கீர்த்தி சுரேஷின் கேரக்டரும் அழுத்தமாக இல்லை. இப்படி பல விஷயங்களை மாரி செல்வராஜ் கவனமாக கையாள தவறி இருக்கிறார். மேலும் தேவர் பிலிம்சில் வருவது போன்று மிருகங்களை காட்டியே படத்தை முடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

மொத்தத்தில் எந்த விஷயமும் ஒன்றுக்கொன்று கனெக்ட் ஆகாமல் போயிருக்கிறது. அதிலும் இரண்டாம் பாதி சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே ஓரளவுக்கு ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறிருக்கிறது. இப்படி மேடையில் மட்டும் வாய்கிழிய பேசிய மாரி செல்வராஜ் இந்த மாமன்னன் படத்தின் மூலம் மண்ணை கவ்வி இருக்கிறார். இதன் மூலம் அவருடைய கேரியரின் சோலி முடிந்து இருக்கிறது.

Also read: 20 நாட்களில் பல கோடி வசூலித்த போர் தொழில்.. தியேட்டர் ஓனர்களை கதி கலங்க வைத்த ஓடிடி

Trending News