விஷாலுக்கு கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்ததில் அவருடைய மார்க்கெட் இப்போது சரிவடைந்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது வெளியாகி இருக்கும் லத்தி திரைப்படம் அவருடைய அலட்சியத்தால் தான் மிக காலதாமதமாகி இப்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது.
மேலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு செய்வது போல் இவர்களை ஆட்களை செட் செய்து தியேட்டரில் ஆடலும் பாடலும் என கோலாகலமாக ரசிகர்களை வரவேற்று இருக்கின்றனர். ஆனாலும் படத்தை பார்த்த பலரும் இதைத்தான் இத்தனை நாளா எடுத்துக்கிட்டு இருந்தீங்களா என்றும், நல்லா இல்லை வெறும் குப்பை என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Also read: கமல், மணிரத்தினத்தை காப்பி அடித்த விஷால்.. கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்
அது மட்டுமல்லாமல் கேரளாவிலும் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு தியேட்டர்களில் கூட்டமே இல்லையாம். அதிலும் ஒரு தியேட்டரில் ஒரே ஒரு ரசிகர் மட்டும் இந்த படத்தை பார்க்க வந்திருக்கிறார். ஆனால் ஒருத்தருக்காக மட்டும் படத்தை ஓட்ட முடியாது என்று தியேட்டர் நிர்வாகிகள் அவருக்கு டிக்கெட் பணத்தை கொடுத்து போயிட்டு வாங்க என அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஒரு தியேட்டரில் 20 பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே ஒரு காட்சி ஓடியிருக்கிறது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே படத்தோட லட்சணம் தெரிந்திருந்தால் தான் விஷால் தரப்பு ஆட்கள் ரசிகர்கள் போலவே சில நபர்களை படம் பார்க்க தியேட்டருக்கு வர வைத்திருக்கிறார்கள்.
Also read: சுழட்டி அடிக்கப்பட்ட லத்தி.. முதல் நாள் வசூலில் மண்ணை கவ்விய விஷால்
ஆனாலும் படம் இப்போது மண்ணை கவ்வி இருக்கிறது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லாமல் மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் படத்தை தயாரித்த நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இருவரும் மிகப் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். நண்பனை நம்பி படம் எடுத்து இப்படி மோசம் போயிட்டோமே என அவர்கள் புலம்பி கொண்டிருக்கிறார்களாம்.
இவையெல்லாம் விஷாலின் பொறுப்பற்ற தனத்தால் மட்டுமே வந்தது. படம் நடிக்கும் போது ஆர்வம் இல்லாமல் நடித்துவிட்டு ப்ரமோஷனுக்கு மட்டும் கெத்தாக வந்து படத்தை வெற்றி அடைய வைக்க அவர் நினைத்தார். ஆனால் அவ்வளவு தில்லுமுல்லு செய்தும் அவை அனைத்தும் பிரயோஜனம் இல்லாமல் போனது தான் மிச்சம். அந்த வகையில் இனிமேல் அவர் ஒரு நடிகராக நடித்து தான் ஆக வேண்டுமா என யோசிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது.
Also read: விஷாலை படுகுழியில் தள்ளிய லத்தி.. தோல்விக்கான 10 பொருத்தமும் பக்காவா இருக்கு