செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இன்னும் மௌனம் காத்தால் எந்த பிரயோஜனமும் இல்ல.. அஜித் அதிரடியாக கொடுத்த கெடுபிடி

பொதுவாக அஜித் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் அவருடைய வேலை நடிப்பது மட்டும்தான் என்று நடித்து வருகிறவர். இதனால் அஜித்தின் ரசிகர்கள் இவரை திரையில் எப்படியாவது பார்த்தால் மட்டும் போதும். படம் எப்படி இருந்தாலும் எங்களுக்கு சந்தோசம் தான் என்று இவருடைய படத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து ரசிகர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இவருடைய அடுத்த படமான விடாமுயற்சி படம் கடந்த ஐந்து மாதங்களாக இழுத்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளிவந்திருந்தன. ஆனால் இதுவரை இப்படத்திற்கான எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

Also read: கடைசியாக ஒரு வாரம் கெடு கொடுத்த அஜித்.. முயற்சியே இல்லாமல் போன விடாமுயற்சி

அதற்கு காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் வருமான வரியில்
சிக்கியதால் மேற்கொண்டு புதுப்படத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்கள். இவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அஜித் இந்த மாதிரியான நேரத்தில் இவர்களை விட்டு சென்றால் அது நன்றாக இருக்காது என்று மிகவும் பொறுமையாக காத்து வந்தார்.

ஆனால் அந்தப் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று புரிந்து கொண்டு, இனி மேலும் மௌனம் காத்திருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜூன் மாதம் முழுவதும் டைம் எடுத்துக்கோங்க. அதற்குள் எனக்கு படப்பிடிப்பு சம்பந்தமான ஒரு நல்ல விஷயத்தை கூற வேண்டும் என்று அதிரடியாக தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுபிடி வைத்துவிட்டார்.

Also read: பல கெட்டப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றுவரை அஜித் பெயரை காப்பாற்றும் மாஸ் கதாபாத்திரம்

அதோடு இல்லாமல் ஜூன் மாதத்திற்குள் எனக்கு எந்த வித பதிலும் வரவில்லை என்றால் நான் வேறு நிறுவனத்துடன் சேர்ந்து கொள்கிறேன் என்று நேரடியாக கூறியிருக்கிறார். அதற்கு காரணம் வாரிசு மற்றும் துணிவு இரண்டும் ஒரே நேரத்தில் தான் வெளிவந்தது. ஆனால் விஜய், வாரிசு படத்திற்கு பிறகு லியோ படத்தில் நடித்து கிட்டத்தட்ட முடியும் தருவாயில் ரிலீஸ் தேதியும் அறிவித்து விட்டார்கள்.

இப்படி இருக்கையில் இன்னும் இவருடைய படம் ஆரம்பிக்கவே இல்லை என்பதால் ரொம்பவே கடுப்பாகிவிட்டார். இதனால் லைக்கா நிறுவனம் கிடைத்த வாய்ப்பை கைநழுவி விட்டு விடக்கூடாது என்ற பயத்தில் எப்படியாவது இந்த படத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அப்படி இல்லை என்றால் இந்த படம் ஏற்கனவே சொன்னது போல் சத்யஜோதி பிலிம்ஸ் இடம் கொடுத்து விடலாம் என்ற யோசனையில் அஜித் இருக்கிறார்.

Also read: 5 கோடி கடன் இருந்த போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. வீடு தேடி வந்த 2 கோடி பணத்தை தூக்கி எறிந்த அஜித்

Trending News