வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

3 தடவை மிஸ் பண்ணிட்டேன், இந்த தடவை மிஸ் ஆகாது.. தளபதி 70 படத்தில் இயக்குனர் செய்யப் போகும் பிரம்மாண்டம்

Thalapathy 70: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட வேலைகள் இப்போது நடந்து வருகிறது. இந்த சூழலில் தளபதி 70 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஒரு பக்கம் விஜய் அரசியலில் இறங்க இருப்பதால் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு அதன் பின்பு தான் சினிமாவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Also Read : வளரும் போதே ஆர்வக்கோளாறில் விஜய் நடித்த படம்.. அப்பாவை மதிக்காமல் கையில் எடுத்த ஆயுதம்

ஆனால் இப்போது தளபதி 70வது படத்தின் இயக்குனர் கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. அதாவது ஏற்கனவே விஜய் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் ஹிட்டான நிலையில் மீண்டும் இவர்கள் இணையவில்லை. ஆனால் விஜய் இடம் மூன்று முறை ஷங்கர் கதை கூறியிருக்கிறார்.

அதன்படி முதலாவதாக 2014 ஆம் ஆண்டு மல்டி ஸ்டார் ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருந்தார். அதில் விஜய் ஹீரோவாகவும், விக்ரம் வில்லனாகவும் நடிப்பதாக இருந்தது. அடுத்ததாக 2017 இல் முதல்வன் இரண்டாம் பாகத்தை விஜய் வைத்து எடுக்க நினைத்தார் ஷங்கர். அதுவும் கைகூடாமல் போய்விட்டது.

Also Read : என்னோட ரசிகன் இதை ஏத்துக்க மாட்டான்.. விஜய் மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது எனக் கூறிய நாகார்ஜுனா

கடைசியாக 2018 ஆம் ஆண்டு 3d அனிமேஷனில் சயின்ஸ் பிக்சன் கதை விஜயிடம் கூறியிருக்கிறார். இவை அனைத்துமே விஜய் பெரிய அளவில் கவரவில்லை. ஆனால் இப்போது அரசியல் திரில்லர் கதை ஒன்றை விஜய்யிடம் ஷங்கர் கூறியிருக்கிறாராம். அதுவும் விஜய் இப்போது அரசியலில் இறங்க இருப்பதால் இந்த கதை அவரை ஈர்த்துள்ளது.

ஆகையால் தளபதி 70வது படம் ஷங்கர் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வெங்கட் பிரபு படம் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. அதன் பிறகு தளபதி 70 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. மூன்று தடவை மிஸ் ஆனாலும் தளபதி 70 எனக்கு தான் என்று டார்கெட் செய்து வைத்துள்ளார் ஷங்கர்.

Also Read : இந்தியாவை புரட்டி போட்டவருடன் கூட்டணி போடும் ஜோசப் விஜய்.. அரசியல் என்ட்ரினா இப்படி இருக்கணும்

Trending News