வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

கேப்டனின் பாடலை பயன்படுத்திய லப்பர் பந்து படக்குழு.. பிரேமலதா விஜயகாந்த் சொன்ன விஷயம்

Vijayakanth : மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பாடல்கள் இப்போது வெளியாகும் படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் தனது பங்களிப்பை கொடுத்தவர் தான் விஜயகாந்த்.

அவரது மறைவு ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சூழலில் விஜய்யின் நடிப்பில் வெளியான கோட் படத்தில் ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்தை நடிக்க வைத்திருந்தனர். வெங்கட் பிரபு இதற்கான அனுமதியையும் பிரேமலதா விஜயகாந்த் இடம் பெற்றிருந்தார்.

ஏனென்றால் சினிமாவில் ஒருவரின் உருவம் அல்லது அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை பயன்படுத்தும் போது காப்புரிமை பெற வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் படக்குழு மீது வழக்கு தொடரலாம். இளையராஜா அவ்வாறு தனது பாடல்களுக்கு காப்புரிமை வாங்கி இருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த் லப்பர் பந்து படத்தில் கேப்டன் பாடல் இடம் பெற்றது குறித்து பேச்சு

இந்நிலையில் சமீபத்தில் லப்பர் பந்து படம் வெளியாகி இருந்தது. இதில் அட்டகத்தி தினேஷ் கெத்து என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் ரசிகராக நடித்திருப்பார். மேலும் கேப்டனின் பாடல் ஆன நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடலும் தினேஷ் என்ட்ரி கொடுக்கும் போது பயன்படுத்தப்பட்டது.

இப்படத்தின் இயக்குனர் தமிழரசு பச்சமுத்துவும் விஜயகாந்தின் தீவிர ரசிகர் தான். இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் இடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், திரைப்படங்களில் கேப்டன் பாடல் மற்றும் போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமை யாரிடமும் கேட்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

ஏனென்றால் விஜயகாந்த் எங்களின் சொத்து அல்ல மக்களின் சொத்து என்று பிரேமலதா கூறி இருப்பது இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சினிமா எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தாலும் கேப்டனின் பெயர் எப்போதுமே மக்களின் மனதில் இருக்கும்.

என்றும் அழியாத கேப்டனின் புகழ்

- Advertisement -spot_img

Trending News