Pongal Release Movies: பல வருடங்களாக தயாராகி வந்த விடாமுயற்சி இந்த பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இப்படம் பின்வாங்கிவிட்டது.
இதனால் சந்தோஷமாக போட்டி களத்தில் பத்து படங்கள் குதித்துள்ளன. இந்த ரேஸில் எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதன்படி பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் வரும் 10ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. அதே தேதியில் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படமும் வெளியாகிறது.
அதே 10ம் தேதி மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடித்துள்ள மெட்ராஸ்காரன் படமும் வெளியாகிறது. அதை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 வருடங்கள் கழித்து மதகஜராஜா வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.
பொங்கலுக்கு ரிலீஸாகும் 10 படங்கள்
மேலும் ஜனவரி 14ஆம் தேதி ஜெயம் ரவி நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை படம் வெளியாகிறது.
அதே தேதியில் சிபிராஜ் நடித்துள்ள டென் ஹவர்ஸ், கேப்டன் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ ஆகிய படங்கள் வெளிவருகிறது.
அது மட்டும் இன்றி கிஷன் தாஸ் நடித்துள்ள தருணம், ஆகாஷ் முரளி அதிதி சங்கர் நடித்துள்ள நேசிப்பாயா படங்களும் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகிறது.
மேற்கண்ட படங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ரகத்தை சேர்ந்தது. காதல் ஆக்சன் என கலந்துகட்டி ரசிகர்களை கவர காத்திருக்கின்றது இந்த படங்கள்.
அதனால் இந்த பொங்கல் நிச்சயம் வெரைட்டியான பண்டிகையாகத்தான் இருக்கும். இருந்தாலும் விடாமுயற்சி தள்ளிப்போனதில் அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தம் தான்.