ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரெட் ஜெயன்ட் புடுங்கியதால் பாழா போன 2 படங்கள்.. உதயநிதியால் பார்த்தாவை பிடித்த பக்கவாதம்

Uthayanithi-Red Giant: உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தற்போது டாப் ஹீரோக்களின் பட தியேட்டர் உரிமையை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது. ஏற்கனவே முன்னணி நிறுவனமாக இருந்த ரெட் ஜெயன்ட் இதனால் கொடிகட்டி பறந்து வருகிறது.

சமீபத்தில் கூட சந்தானம் நடிப்பில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் விநியோக உரிமையை இந்த நிறுவனம்தான் கைப்பற்றி இருந்தது. ஆனால் இதற்கு முன்பாகவே Trident Arts உரிமையாளர் ரவி தான் இந்த உரிமையை 1.5 கோடி கொடுத்து வாங்கி இருந்தார்.

ஆனால் அவரிடம் இருந்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை புடுங்கி விட்டது. அதே போல் ஜெயம் ரவியின் இறைவன் பட உரிமையையும் மதுரை அழகர் என்பவர் வாங்கி இருந்தார். அதையும் ரெட் ஜெயன்ட் வாங்கி இருந்தது. ஆனால் இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு கல்லா கட்டவில்லை.

Also read: அப்பா வழியே வேண்டாம்ன்னு உதறிய 5 வாரிசுகள்.. உதயநிதி, மாதவன் பசங்க போடும் போடு

இதில் சந்தானம் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பதால் வடக்குப்பட்டி ராமசாமியை வாங்குவதில் ரெட் ஜெயன்ட் அதிக ஆர்வம் காட்டியிருந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட சர்ச்சைகள் உருவானது.

அதில் இடம்பெற்று இருந்த ஒரு வசனம் பெரியாரை சந்தானம் விமர்சித்தார் என ஒரு சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. ஆனாலும் படம் வெளியான பிறகு நல்ல விமர்சனங்கள் தான் கிடைத்தது. இருந்தாலும் கலெக்சனை பொருத்தவரையில் பலத்த அடிதான்.

இப்படி ரெட் ஜெயன்ட் புடுங்கிய இரண்டு பாகங்களும் பாழா போனது தான் மிச்சம். அந்த வகையில் உதயநிதி வாங்கியிருப்பதால் படம் கல்லாகட்டும் என்று நினைத்த சந்தானத்திற்கும் இது ஆப்பாக அமைந்துவிட்டது.

Also read: விஜய்யுடன் போட்டி போட தயங்கிய உதயநிதி.. வைரலாகும் பதிவு

Trending News