2025 Gangster Movies: இந்த வருடத்தின் தொடக்கம் அமோகமாக இருக்கிறது. பொங்கல் ரேஸில் திடீரென உள்ளே வந்த மதகஜராஜா ஆடியன்ஸை தியேட்டர் பக்கம் இழுத்தது.
அதையடுத்து குடும்பஸ்தன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது வெளியாகி உள்ள விடாமுயற்சியும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதேபோல் இந்த வருடம் ஜனநாயகன், வீரதீர சூரன், இட்லி கடை என டாப் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அதில் மூன்று கேங்ஸ்டர் படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ஜனநாயகன் முழு அரசியல் சார்ந்த கதை என்பது தெரிந்து விட்டது. அதையடுத்து அஜித்தின் குட் பேட் அக்லி ரஜினியின் கூலி, சூர்யாவின் ரெட்ரோ ஆகிய படங்கள் கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்படும் 3 கேங்ஸ்டர் படங்கள்
இதில் குட் பேட் அக்லி ஏப்ரல் 10ம் தேதி வெளிவர உள்ளது. இதில் அஜித் மூன்று கெட்டப்புகளில் வெறித்தனமான தரிசனம் கொடுக்க இருக்கிறார்.
அதிலும் படத்திலிருந்து வெளிவந்த சில போட்டோக்கள் அஜித்தின் வெரைட்டியான லுக் ஆக இருந்தது. அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ படமும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் லோகேஷ், ரஜினி கூட்டணியின் கூலி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாகார்ஜுனா, சத்யராஜ் உட்பட பல பிரபலங்கள் இதில் நடித்து வருகின்றனர்.
இப்படியாக இந்த மூன்று படங்களும் இந்த வருடத்தில் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. இந்தப் படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.