கடந்த சில வருடங்களில் சிம்பு நடித்த படங்கள் தியேட்டரில் வெளியாவதே பெரிய குதிரைக்கொம்பாக இருந்த நிலையில் அதில் சில படங்கள் தற்போது வரை சாட்டிலைட் ரைட்ஸ் விற்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு என்றாலே வம்பு என்ற கால கட்டங்களில் வந்த படங்கள் அது. எப்போதுமே சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முடியாது என்பது படம் ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு தெரியும்.
இருந்தாலும் சிம்புவை வைத்து ரிஸ்க் எடுத்து படம் தயாரித்து தியேட்டர்களில் வெளியிட்டு வந்தனர். அப்படி வெளியிட்ட படங்கள் பெரிதாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் சிம்பு தன்னுடைய அப்பா டி ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் படங்களில் நினைத்த நேரத்தில் நடித்ததால் அந்த பழக்கம் அவருக்கு வந்து விட்டதா என்பது தெரியவில்லை.
மற்ற தயாரிப்பாளர்களையும் படுத்தி எடுத்துவிட்டார். ஆனால் தற்போது அப்படி இல்லை என்றே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சிம்புவின் சினிமா கேரியரில் ஒரு மூன்று படங்கள் தற்போது வரை சேட்டிலைட் ரைட்ஸ் விற்கப்படாமல் கிடக்கிறது.
அதில் ஒன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன். தியேட்டரிலேயே ஒரு நாள் கூட ஓடாத இந்தப் படம் கண்டிப்பாக டிவியில் வெளியிட்டாலும் பார்க்க மாட்டார்கள் என்று தெரிந்தே அந்த படத்தை விற்கவில்லை போல.
ஆனால் சிம்புவின் மற்ற இரண்டு படங்களான இது நம்ம ஆளு மற்றும் வாலு போன்ற படங்கள் சிம்பு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. இருந்தாலும் இந்த படங்களின் சேட்டிலைட் உரிமை ஏன் விற்கப்படவில்லை என்பது தற்போது வரை கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.