வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகப் போகும் 4 படங்கள்.. வாய் சவடால் விட்டு புஸ்ஸுன்னு போன சைக்கோ த்ரில்லர்

This Week OTT Movies: தியேட்டரை காட்டிலும் இப்போது ஓடிடி தளங்களுக்கு தான் அதிக மவுசு இருக்கிறது. அதனாலேயே பெரும்பாலான ஆடியன்ஸ் புது படங்களை டிஜிட்டல் திரையில் பார்ப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை காண்போம்.

அதில் கடந்த வாரம் பல படங்கள் வெளிவந்த நிலையில் இந்த வாரம் மற்ற மொழியில் அதிக படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் தமிழைப் பொருத்தவரையில் 4 படங்கள் தான் ரிலீஸ் ஆகிறது. அதில் அமிதாஷ் பிரதன், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பரம்பொருள் இன்று ஆஹா மற்றும் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து நாளை இரண்டு திகில் படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ட்ரைலரிலேயே கொலை நடுங்க வைத்த ஜெயம் ரவியின் இறைவன் தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் புஸ்ஸுன்னு போன அப்படம் நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக மிகப்பெரும் வரலாறை உருவாக்கிய சந்திரமுகி இரண்டாம் பாகமாக வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இப்படம் இல்லாத காரணத்தினாலும் திகில் என்ற பெயரில் காமெடி பண்ணி இருந்ததாலும் வரவேற்பு பெறாமல் போனது.

அதனாலேயே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லாமல் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என புறக்கணித்த கதையும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் சந்திரமுகியின் அவதாரத்தை நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் கண்டு களிக்கலாம். அதற்கு அடுத்தபடியாக வினோத் ராஜ் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருந்த கூழாங்கல் வரும் 27 ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இப்படம் நெதர்லாந்தில் நடைபெற்ற 50வது இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ரோட்டர்டாமில் திரையிடப்பட்டது. அதில் டைகர் விருதை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமையை தேடி கொடுத்தது. அது மட்டுமின்றி இந்தியாவில் நடைபெற்ற 52வது பிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது. இப்படியாக இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் பார்வைக்காக இந்த வாரம் வர இருக்கிறது.

Trending News