வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோவில் புஸ்ஸுன்னு போன 4 விஷயங்கள்.. நெல்சன் போல் லோகேஷ் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

Leo-Lokesh-Nelson: எப்ப எப்ப என்று மிகப்பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்த லியோ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது. ஆனால் முதல் நாளிலேயே படத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் குவிந்தது. அதிலும் மொத்த குற்றச்சாட்டும் லோகேஷ் பக்கம் திரும்பியது ஒட்டுமொத்த மீடியாவையும் பரபரப்பாக்கியது.

ஏனென்றால் படம் வெளிவருவதற்கு முன்பே அது குறித்து ஏகப்பட்ட ஹைப் இருந்தது. ஆனால் லியோவை பார்த்த பிறகு அது அனைத்தும் காத்து போன பலூனாக புஸ் என்று போனது. இதற்கு நான்கு முக்கிய காரணங்களும் இருக்கிறது. அதில் முதலாவதாக LCU சமாச்சாரம் தான். விக்ரம் படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ் லியோவில் அதை ஓவர் டேக் செய்யும் வகையில் கமல், கார்த்தி, சூர்யா ஆகியோரை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நெப்போலியன் கதாபாத்திரம் மட்டும்தான் இடம்பெற்று இருந்தது. கமலுடைய கதாபாத்திரம் கூட வெறும் வாய்ஸாக மட்டுமே காட்டப்பட்டது. இதுவே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஏதோ வைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்தது போல் தெரிந்தது. அதற்கு அடுத்தபடியாக அளவுக்கு அதிகமான கதாபாத்திரங்கள். அதாவது மிஷ்கின், சாண்டி, அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், வையாபுரி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் தேவையற்றதாக இருக்கிறது.

மூன்றாவதாக தனுஷ், விக்ரம், ராம்சரண் போன்ற ஹீரோக்களில் ஒருவர் கேமியா ரோலில் வரப்போகிறார் என்ற செய்தியும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் பட குழு இந்த வதந்தியை அப்படியே மெயின்டைன் செய்து வந்தது இப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நான்காவதாக இசை வெளியீட்டு விழா நடக்காமல் போனது.

இதுவே சில விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் படம் வெளி வருவதற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் கூட சம்பந்தப்பட்ட எந்த நடிகர், நடிகையும் பிரமோஷனில் ஈடுபடவில்லை. லோகேஷ் மட்டும் தான் வளைத்து வளைத்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார். அதிலும் அவர் லியோ பற்றி பேசியதை விட தலைவர் 171 பற்றி பேசியது தான் அதிகமாக இருந்தது.

இப்படிப்பட்ட காரணங்கள் லியோவுக்கு பின்னடைவாக இருந்த நிலையில் படம் பற்றிய விமர்சனங்களும் ஒரு தடைக்கல்லாக மாறியது. இதே போன்று தான் நெல்சன் பீஸ்ட் சமயத்தில் தாறுமாறான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். அதனாலேயே ஜெயிலர் படம் பற்றிய பயமும் ஒரு பக்கம் இருந்தது. அப்படி ஒரு நிலைமை தான் இப்போது லோகேசுக்கும் வந்திருக்கிறது. ஆக மொத்தம் தலைவர் 171 அவரின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது.

Trending News