விஷாலுடன் காதல் கிசுகிசுவில் மாட்டிய 5 நடிகைகள்.. இதுல ஒரு நடிகை ஊரை விட்டே ஓடிட்டாங்க!

தமிழ் சினிமாவில் ஒரே நடிகருடன் பல படங்களில் நடித்தால் அந்த நடிகை தானாகவே காதல் கிசுகிசுவில் மாட்டுவார். அப்படி நடிகர் விஷால் வாழ்க்கையில் 5 நடிகைகள் காதல் கிசுகிசுவில் சிக்கி தவிக்கின்றனர்.

அதில் முதல் ஆளாக இருப்பவர்தான் மலையாள நடிகை லட்சுமி மேனன். பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தபோது இருவருக்கும் காதல் என பத்திரிகைகளில் எழுதினர். அதற்கு தகுந்தார்போல் இருவரும் உதட்டு முத்த காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் பாவம் அதன்பிறகு தமிழ் சினிமாவை விட்டே ஓடிவிட்டார் லட்சுமிமேனன்.

vishal-lakshmi-menon-cinemapettai
vishal-lakshmi-menon-cinemapettai

அடுத்ததாக அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். ஆனால் விஷாலுக்கும் வரலட்சுமிக்கு இடையில் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

vishal-varalaxmi-cinemapettai
vishal-varalaxmi-cinemapettai

மூன்றாவதாக விஷால் வலையில் சிக்கியவர் தான் கீர்த்தி சுரேஷ். பெரிய அளவு விஷாலுடன் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சண்டக்கோழி-2 படத்தில் நடித்தபோது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கமான ரொமான்ஸ் காரணமாக இருவரும் கிசுகிசுக்கப்பட்டனர்.

vishal-keerthi-suresh-cinemapettai
vishal-keerthi-suresh-cinemapettai

அதனைத் தொடர்ந்து விஷாலுடன் நடித்த அனு இமானுவேல், கேத்தரின் தெரேசா போன்றோரும் விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டனர். ஆனால் இந்த தகவல் கோலிவுட் வட்டாரங்களில் தாண்டி வெளியில் வரவில்லை.

vishal-anu-emmanuel-cinemapettai
vishal-anu-emmanuel-cinemapettai

ஒரு சில படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது இந்த மாதிரி கிசுகிசுக்கள் ஏற்படுவது சகஜம்தான். அப்படி கிசுகிசு வரும்போது அந்த நடிகர் நடிகைகள் தாங்களாகவே இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். அப்படித்தான் விஷால் தற்போது புதிய நடிகைகளுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

vishal-catherine-tresa-cinemapettai
vishal-catherine-tresa-cinemapettai