வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

எதுக்கு வந்தோம்னு தெரியாமலே சுத்துதுங்களே.. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 5 தேவையில்லாத ஆணிகள்

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பாதி கிணறை தாண்டி விட்டது. இதுவரை ஆண் பெண் இரு அணிகளாக இருந்த போட்டியாளர்கள் தற்போது ஒன்றாக இணைந்து தங்கள் விளையாட்டை விளையாட இருக்கின்றனர்.

இப்போது தான் தனித்துவமான ஆட்டம் தொடங்கி இருக்கிறது. இதில் யார் இறுதி கட்டம் வரை செல்வார்கள் என்ற ஆர்வம் பார்வையாளர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதே போல் சில தேவையில்லாத ஆணியை நீக்கிவிட்டால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்றும் தோன்றாமல் இல்லை.

அந்த அளவுக்கு எரிச்சல் ஊட்டும் சில நபர்கள் வீட்டுக்குள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் யார் என்றால் ரஞ்சித், சத்யா, ரயான், சாச்சனா, சிவகுமார் இவர்கள் தான். இதில் உச்சகட்ட கோபத்தை வரவழைப்பவர் டாடியின் லிட்டில் பிரின்சஸ்தான்.

சாப்பாடு என்றால் முதல் ஆளாக வந்து விடும் இவர் பக்கா சுயநலவாதி. ஏதோ விடுமுறைக்கு வந்தது போல் அலப்பறை பண்ணும் இவரை பார்க்கும்போது முதல் சீசன் ஜூலியே பரவாயில்லை என்று தோன்றுகிறது. விரைவில் இவர் வீட்டை விட்டு வெளியேறினால் நன்றாக இருக்கும்.

பிக் பாஸ் வீட்டின் டம்மி பாவா போட்டியாளர்கள்

அடுத்ததாக ரஞ்சித் வீட்டுக்குள் வரும்போது நிச்சயம் ஏதாவது சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அவர் சேஃப் கேம் தான் ஆடி வருகிறார். இவருக்கு அடுத்ததாக சத்யா எதற்கு வீட்டுக்குள் இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

பல நேரங்களில் அவர் டம்மி பாவா போல் தான் இருக்கிறார். இவருக்கு அடுத்து வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்திருக்கும் ரயான் பெரிய அளவில் சம்பவம் ஒன்றும் செய்யவில்லை. இதில் மஞ்சுரி, ராணவ் கூட அவ்வப்போது ப்ரோமோவில் வருகின்றனர்.

ஆனால் இவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக சிவாஜி வீட்டு வாரிசு சிவகுமார் ஏன் வந்தோம் என்று தெரியாமல் இருக்கிறார். இவருடைய உண்மை முகம் இன்னும் வெளிப்படவில்லை. யாராவது நம்மை தப்பா புரிஞ்சுப்பாங்களோ என்ற எண்ணம் இப்போது வரை அவருக்கு இருக்கிறது.

அதனால் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருக்கிறார். இத்தனைக்கும் கோபப்பட வேண்டிய இடங்களில் கூட அவர் அமைதியாக இருப்பது தான் பெரும் பின்னடைவாக இருக்கிறது.

இதனால் அடுத்த வாரம் இவர் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படியாக இந்த ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் தேவையில்லாத ஆணியாக இருக்கின்றனர்.

Trending News