ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விடாமுயற்சிக்கே விடிவு காலம் வரல.. அஜித்துக்காக தவம் கிடக்கும் 5 இயக்குனர்கள்

Actor Ajith: விடாமுயற்சி படத்தை ஆரம்பிக்க படகுழு விடாமல் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அது எப்போது தொடங்கும் என்ற விவரம் தான் உறுதியாக தெரியவில்லை. இன்னும் சில வாரங்களில் ஷூட்டிங் நடத்தப்படும் என்ற செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இது உண்மையா என்ற ஒரு சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த சூழலில் அஜித்தின் பார்வை எப்போது தங்கள் பக்கம் திரும்பும் என்று ஐந்து வெற்றி பட இயக்குனர்கள் தவம் கிடைக்கிறார்களாம்.

Also read: ரொம்ப ஆசைப்பட்டு அஜித் ரீமேக் செய்ய சொன்ன படம்.. இயக்குனரால் கிடைத்த ஏமாற்றம்

அந்த வகையில் விடாமுயற்சிக்கு பிறகு அவரின் அடுத்த படம் இவர்களோடு தான் என்ற ஒரு பேச்சும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அதில் சிறுத்தை சிவாவோடு அஜித் மீண்டும் இணைய இருக்கும் தகவல் ஏற்கனவே வெளிவந்தது.

தற்போது கங்குவாவில் பிஸியாக இருக்கும் இவர் அதற்கு முன்பாகவே அவருக்கு ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம். அவருக்கு அடுத்ததாக ஜெயிலர் மூலம் வெற்றிவாகை சூடியுள்ள நெல்சனும் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also read: ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி.. விடாமுயற்சிக்காக ஸ்மார்ட்டாக மாறிய அஜித்தின் நியூ லுக்

அவரைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் சோழர் கால வரலாற்று பின்னணியை கொண்ட கதையை தயார் செய்து வைத்துக்கொண்டு வருட கணக்கில் காத்திருக்கிறார். இது அஜித்துக்கு பிடித்திருந்தாலும் நீண்ட நாட்கள் கால்ஷூட் தர வேண்டும் என்பதால் வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருக்கிறார்.

அதேபோன்று மார்க் ஆண்டனி பட வெற்றியால் குஷியாக இருக்கும் ஆதிக், அஜித்துக்கான சூப்பர் கதையோடு இந்த லைனில் நிற்கிறார். இவருக்கு அடுத்தபடியாக சுதா கொங்கராவும் போட்டியில் இருக்கிறார். இப்படியாக இந்த ஐந்து பேரும் காத்திருக்கும் நிலையில் யாருக்கு முதலில் ஜாக்பாட் அடிக்க போகிறது என்பது அஜித்தின் கையில் தான் இருக்கிறது.

Also read: போற இடமெல்லாம் அஜித் துதி பாடும் இயக்குனர்.. விடாமுயற்சிக்குப் பின் வாய்ப்பு கொடுப்பாரா ஏகே?

Trending News