Actor Vijay: விஜய் கட்சியின் பெயரை அறிவித்தது பல காரசாரமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதில் விஜய்க்கு ஆதரவாக சிலர் பேசி வந்தாலும் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அரசியல் களத்தில் இதெல்லாம் சாதாரணம் தான்.
அந்த வகையில் தற்போது வலைப்பேச்சு அந்தணன் விஜய்யை அரசியலில் மறைமுகமாக இயக்கப் போகும் ஐந்து கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் முதலாவதாக ஜான் ஆரோக்கியசாமி என்பவர் இருக்கிறார். இவருடைய அமைப்பு அரசியலில் இறங்கிய அன்புமணி, நடிகை ரம்யா ஆகியோருக்கு பக்க பலமாக இறங்கி பல வேலைகளை செய்தது.
அதன்படி அவர்கள் எப்படி பேச வேண்டும், நடக்க வேண்டும், எவ்வாறு உடை உடுத்த வேண்டும் என்பதையெல்லாம் இந்த அமைப்புதான் தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது விஜய்யின் அரசியல் பயணத்திற்கும் இந்த ஜான் ஆரோக்கியசாமி தான் பக்கபலமாக இருக்கிறாராம்.
Also read: விஜய் அண்ணன் கிளம்பியாச்சு காலியா இருக்கும் திண்ணை.. இடத்தை பிடித்த முண்டாசு கட்டிய 5 நடிகர்கள்
இரண்டாவதாக ராம்குமார் என்பவர் விஜய் கட்சியின் முக்கிய நபராக இருக்கிறார். இவர் பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன் என்பவரை கடுமையாக விமர்சித்ததாக ஒரு சர்ச்சை சில வருடங்களுக்கு முன்பு வெடித்தது. அதற்கு விஜய் கூட வருத்தம் தெரிவித்து இருந்தார்.
மூன்றாவதாக வீர விக்னேஸ்வரன் என்பவரும் முக்கிய நபராக இருக்கிறார். இவர் பிஜேபி அண்ணாமலை தான் முதல்வர் என்ற ரேஞ்சுக்கு பல இடங்களில் பேசியிருக்கிறார். மேலும் பிஜேபி தமிழ்நாட்டில் ஜெயிக்கும் என்பது போன்ற கருத்துக்களையும் கூறியவர். இவரை விஜய் தன்னுடைய குழுவில் சேர்ந்திருப்பது ஆச்சரியம் தான்.
நான்காவதாக லயோலா மணி என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்திய தன்னுடைய ட்விட்டர் பதிவில் திமுக, தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய நபர்களை தூக்கம் முயற்சியில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். இன்னும் யார் யார் முக்கியமானவர்கள் என்பதே முடிவெடுக்கப்படாத நிலையில் அவருடைய இந்த பதிவு நகைச்சுவையாக தான் இருக்கிறது.
ஐந்தாவதாக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். இவர் விஜய்க்கு எந்த அளவுக்கு நெருக்கம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் செய்யும் ஒவ்வொன்றும் விஜய்க்கு பின்னடைவாக தான் அமையும். அந்த வகையில் இந்த ஐந்து நபர்களில் ஜான் ஆரோக்கியசாமி ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படும் நபராக இருக்கிறார்.
மற்ற நான்கு பேரை உடன் வைத்திருந்தால் விஜய் அரசியலில் காலம் தள்ளுவது கஷ்ட தான். சுருக்கமாகச் சொன்னால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் கதை தான். இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அந்தணன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.