ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம்

Actress Asin: தன் எதார்த்தமான நடிப்பால், சினிமா வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தான் அசின். இவர் மேற்கொண்ட பல படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதை தொடர்ந்து இவர் தன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதில் முக்கியத்துவம் கொடுத்து நிராகரித்த படங்கள் ஏராளம். அவ்வாறு இன்ட்ரஸ்ட் இல்லாமல் அசின் விலகிய 5 சூப்பர் ஹிட் படங்களை பற்றி இங்கு காண்போம்.

2007ல் அஜித்தின் நடிப்பில் வெற்றி கண்ட படம் தான் பில்லா. இப்படத்தில் நயன்தாரா, அஜித், நமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் அசின் நடிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து போட்டோ சூட்டின் போது மாடர்ன் உடையில் நடிக்க மறுத்ததால் அப்படம் இவருக்கு கைவிட்டுப் போனது.

Also read: புளிச்சு போன 7 வருட திருமண வாழ்க்கை.. தளபதியின் ஆஸ்தான நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா.?

2006ல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் ஜில்லுனு ஒரு காதல். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இருப்பினும் பூமிகா ஏற்ற கதாபாத்திரத்தை அசின் நடித்தால் நல்லா இருக்கும் என்று சூர்யா கூறிய பின்பும் அவை செகண்ட் ஹீரோயின் ரோல் என்பதால் அக்கதாபாத்திரத்தை நிராகரித்துள்ளார் அசின்.

மேலும் 2005 ல் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஜி. இப்படத்தில் அஜித், திரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் அசின் நடிப்பதாக இருந்தது, ஆனால் இப்படத்தின் கதையைக் கேட்டு விட்டு இத்தகைய ரோலில் நடிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்து விட்டாராம்.

Also read: சூர்யா கூட நடிக்க மாட்டேன்னு மறுத்த நடிகை.. அந்த ரோலே வேண்டாம் என நிராகரித்த கியூட் ஹீரோயின்

அதன்பின் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான படம் தான் வரலாறு. தனக்கு ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுப்பதில் வல்லவர் அசின். அவ்வாறு 2005ல் வெளிவந்த சச்சின் படத்தையும் நிராகரித்து அதன் பின் அதே ஆண்டு வெளிவந்த சிவகாசி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து போக்கிரி, காவலன் போன்ற படங்களிலும் இணைந்து நடித்திருப்பார்கள்.

மேலும் 2003ல் வெளிவந்த படம் தான் சாமி.  இப்படத்திலும் த்ரிஷாவிற்கு பதிலாக அசின் நடிப்பதாக இருந்தது. அப்பொழுது சில படங்களில் கமிட்டாகி இருந்ததால் இப்படத்தை நிராகரித்து விட்டாராம். இத்தகைய சூப்பர் ஹிட் படங்களை நிராகரித்ததன் குறித்து தற்பொழுது வருத்தப்பட்டு வருகிறார்.

Also read: தலையில குடுமி, கையில துப்பாக்கி.. டெரர் லுக்கில் அஜித், இணையத்தை கலக்கும் விடாமுயற்சி போஸ்டர்

Trending News