வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

இந்த வாரம் ஓடிடிக்கு வரும் 6 படங்கள்.. ஆயிரம் கோடி வசூல் செய்ய முடியாமல் திணறிய லியோ

This Week OTT Released Movies: ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகும் நிலையில் இந்த வாரம் தீபாவளி பண்டிகை என்பதால் தியேட்டரிலேயே நிறைய படங்கள் வெளியானது. அந்த வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சந்திரமுகி 2, ரெய்டு போன்ற எக்கச்சக்க தமிழ் படங்கள் தியேட்டரை சூழ்ந்து கொண்டாலும் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகி பல படங்கள் தோல்வியுற்ற நிலையில் சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நவம்பர் 17ஆம் தேதி சித்தா வெளியாகிறது.

அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் கண்ணூர் ஸ்குவாட் படமும் டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் இல் நவம்பர் 17ஆம் தேதி தான் வெளியாகிறது. இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ரோனி டேவிட், விஜயராகவன், அசிஸ் நெடுமாங்கெட் ஆகியோர் நடித்துள்ளனர்.

Also read: இங்கயேன் ஷூட்டிங் வச்சோம்னு பரிதவிப்பில் விஜய்- வெங்கட் பிரபு?. சோகமா ஏர்போர்ட் வந்த தளபதி

இளவரசி டயானாவின் மறைவை பற்றிய தி கிரவுண்ட் சீசன் 6 தொடரின் முதல் பகுதி நெட்பிளிக்ஸ் தளத்தில் நவம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது. அப்போதைய பிரிட்டன் அரசின் கதையை கற்பனையாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.

அடுத்ததாக அமேசான் ப்ரைம் வீடியோவில் கங்கிராட்ஸ் மை எக்ஸ் என்ற படம் வெளியாகிறது. இந்த படம் நவம்பர் 16ஆம் தேதி தான் வெளி வருகிறது. மேலும் இப்படம் திருமணத்திற்கு பிறகு முந்தைய காதல் கதையில் உள்ள திருப்பங்களை அடிப்படையாக வைத்து சுவாரசியமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவான லியோ படம் அக்டோபர் 19 வெளியான நிலையில் ஒரு மாதத்திற்குள்ளாகவே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. தியேட்டரில் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது வரை 600 கோடியை நெருங்கிய நிலையில் நவம்பர் 23ஆம் தேதி ஓடிடியில் லியோ வெளியிடப்படுகிறது.

Also read: விஜய்யை நம்பி ஓவர் ஆட்டம் போட்ட லலித்.. எதிரியிடமே தஞ்சம் அடைந்த கொடுமை

- Advertisement -spot_img

Trending News