புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சுப்பிரமணியபுரம் கொடுத்த தைரியம், ரீ-ரிலீஸ்காக வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்.. அடி போளி அஜித் கூட லிஸ்ட்ல இருக்காரே

Re Release Movies: சமீப காலமாக சினிமாவில் ஏற்கனவே ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்வது என்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பாபா படத்தை டிஜிட்டல் முறையில் ரீ ரீலீஸ் செய்தார். அதேபோன்று உலகநாயகன் கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு படமோ ரீ ரிலீஸ் ஆகியது. அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன் சுப்ரமணியபுரம் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தமிழில் இந்த ஆறு படங்களை மீண்டும் ரிலீஸ் செய்ய அந்த பட குழு திட்டமிட்டு இருக்கிறது.

காக்க காக்க: நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் காக்க காக்க. சூர்யா இந்த படத்தில் போலீசாக நடித்தது தமிழ் சினிமா ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றது. காக்க காக்க படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். நடிகை ஜோதிகா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இப்போது மீண்டும் ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

Also Read:ஹீரோக்களை சாகடிக்கும் 6 இயக்குனர்கள்.. பாலா படமே வேண்டாம் என ஒதுங்கும் நிலைமை

அமர்க்களம் : ஒரே படத்தால் நடிகர் அஜித்குமாருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது என்றால் அது அமர்க்களம் தான். இந்த படத்தில் அஜித் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தியிருப்பார். மேலும் நடிகை ஷாலினி உடனான இவருடைய கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது இந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

பருத்திவீரன்: நடிகர் கார்த்தி முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் பருத்திவீரன். முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் கார்த்தி. சரவணன், பிரியாமணி, பொன்வண்ணன் என இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படம் தற்போது மீண்டும் ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது.

Also Read:அனிருத் இருந்தா 100 கோடி கேட்கும் ரஜினி.. சின்ன பையனு ஏமாத்துறாங்க!

மின்னலே : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அழகான காதல் கதை தான் மின்னலே. முக்கோண காதல் கதையை இவர் ரொம்பவும் வித்தியாசமாக கையாண்டு இருந்தார். மாதவன், அப்பாஸ், ரீமாசென் என அழகிய காம்போவில் இந்த படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மின்னலே மீண்டும் ரீ ரீலீஸ் செய்யப்பட்டாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.

தீனா: நடிகர் அஜித்குமார் கிட்டதட்ட 60 படங்கள் வரை தன்னுடைய சினிமா கேரியரில் நடித்து விட்டார். ஆனால் இன்றுவரை அவருடைய சிறந்த படங்கள் என பேசப்படும் ஒரு சிலவற்றில் தீனாவும் மிக முக்கியமான ஒன்று. இந்த படம் தான் அஜித் குமாரை ஒரு ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இது மீண்டும் ரீ ரீலீஸ் ஆகும்போது வசூலில் வேட்டையாடும் என்பது உறுதி.

Also Read:100 கோடியை தொட முடியாமல் திணறிய ஜெய்லர் முதல் நாள் வசூல்.. ஏரியா வாரியாக அதிகாரப்பூர்வமாக வந்த ரிப்போர்ட்

Trending News