வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மறுபிறவியை மையப்படுத்தி வெளிவந்த 6 படங்கள்.. சிங்கப்பெண்ணாக கர்ஜித்த அருந்ததி ஜக்கம்மா

Reincarnation Movies: இப்போது வெட்டு குத்து சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் தான் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள்தான் வெற்றி பெறும் என்ற ஒரு அதீத நம்பிக்கையும் இயக்குனர்களுக்கு இருக்கிறது.

ஆனாலும் க்ரைம், ஹாரர், சயின்ஸ் பிக்சன் போன்ற கதைக்களத்தைக் கொண்ட வித்தியாசமான படங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு வரவேற்பும் உண்டு. அதில் மறுபிறவி கதைகளும் ஏராளமாக வந்திருக்கிறது. அதைப் பற்றி இங்கு காண்போம்.

ஏழாம் அறிவு: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மர் சீனாவுக்கு சென்று அங்கு தனக்கு தெரிந்த கலைகளை மக்களுக்கு கற்றுக் கொடுப்பார்.

அவருடைய வம்சாவளியில் பிறந்த கிட்டத்தட்ட மறுபிறவியான மற்றொரு சூர்யா இந்தியாவுக்கு வரும் ஆபத்தை முறியடிப்பார். மறுபிறவி போலவும் அறிவியல் புனைவு கதையாகவும் இப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

அனேகன்: கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், கார்த்திக், அமைரா ஆகியோர் இப்படத்தில் நடித்திருப்பார்கள். முந்தைய ஜென்மங்களில் காதலில் சேர முடியாத காதலர்கள் மீண்டும் மறுபிறவி எடுப்பார்கள்.

ஆனால் இந்த ஜென்மத்திலும் அவர்களுடைய காதலுக்கு பல தடைகள் வரும். அதை எதிர்த்து எப்படி அவர்கள் இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகரும் இப்படமும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது.

மாவீரன்: ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்திருப்பார்கள். முந்தைய பிறவியில் காதல் கைகூடாமல் மரணத்தை தழுவும் ஜோடி மீண்டும் மறுபிறப்பு எடுக்கிறார்கள். அவர்கள் தங்களை அடையாளம் கண்டு கொண்டு மீண்டும் இணைந்தார்களா என்பது தான் படத்தின் கதை.

பிரம்மாண்ட இயக்குனரான ராஜமவுலி படத்தை அதே பாணியில் தான் எடுத்திருப்பார். திரைக்கதையை அவர் கொண்டு சென்ற விதமும் இசையும் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது. அதனாலயே இப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

அருந்ததியாக மிரட்டிய அனுஷ்கா

ஷியாம் சிங்கா ராய்: ராகுல் சன்கிரிடியான் இயக்கத்தில் நானி, சாய்பல்லவி, கீர்த்தி செட்டி ஆகியோர் இப்படத்தில் நடித்திருப்பார்கள். இதில் நானி இயக்கிய கதை ஷியாம் சிங்கா ராய் என்பவருக்கு சொந்தமானது என வழக்கு போடப்படும்.

அந்த விசாரணையில் அவருடைய மறுபிறவி தான் நிகழ்காலத்தில் இருக்கும் நானி என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும். இதில் முந்தைய காலத்தில் நடந்தது என்ன சாய் பல்லவியின் கதாபாத்திரம் என அனைத்துமே ட்விஸ்ட் கலந்ததாக இருக்கும்.

அருந்ததி: கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக இப்படத்தில் நடித்திருப்பார். பிரேத ஆத்மாவாக இருக்கும் பசுபதி தன் சமாதியில் இருந்து வெளிவந்து அனுஷ்காவை கொல்ல முயற்சி எடுப்பார்.

அப்போது அவருக்கு தான் தங்கள் குடும்பத்தினர் ஜக்கம்மாவாக வணங்கும் ராணி என்பது தெரியவரும். முந்தைய பிறவியில் அருந்ததி என்கிற ஜக்கம்மாவாக வரும் அனுஷ்கா கொடூரன் பசுபதியை கொன்று சமாதியாக்கி விடுவார்.

அவருடைய பிரேத ஆத்மாவை அழிப்பதற்காக தன் உயிரை தியாகம் செய்யும் அவர் மீண்டும் மறு பிறவி எடுப்பார். அதில் அவர் அந்த ஆத்மாவை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. வெகு சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருந்த இப்படம் இப்போதும் ரசிக்கக்கூடிய ஒன்றுதான்.

இன்னும் சொல்லப்போனால் எத்தனை மறுபிறவி படங்கள் வந்தாலும் இந்த ஒரு படத்திற்கு ஈடாகாது. அந்த அளவுக்கு அனுஷ்கா அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவே அவரை முன்னணி நாயகி என்ற அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான இப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமும் நிகழ்காலம் கடந்த காலம் சம்பந்தப்பட்ட கதைதான். கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யாவின் மறுபிறவி பற்றிய இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது.

Trending News