Pongal Release Movies Final List: இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் விடாமுயற்சி தள்ளிப்போனது தான்.
அந்த அறிவிப்பு வந்ததுமே இதுவரை தாமதமாகி கொண்டிருந்த படங்கள் அத்தனையும் பொங்கலுக்கு வர போகிறோம் என போஸ்டரை வெளியிட்டனர்.
ஆனால் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் இறுதியாக 7 படங்கள்தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதில் பலரும் எதிர்பார்த்த படைத்தலைவன் விலகி இருப்பது அதிர்ச்சி தான்.
அதேபோல் மிர்ச்சி சிவாவின் சுமோ, சிபிராஜின் டென் ஹவர்ஸ் ஆகிய படங்களும் பொங்கலுக்கு ரிலீசாகவில்லை. இதை தவிர்த்து தியேட்டரில் போட்டி போட போகும் படங்களை பற்றி இங்கு காண்போம்.
தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட்
அதன்படி ஜனவரி பத்தாம் தேதியான நாளை பாலா, அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் வெளியாகிறது.
அதேபோல் சங்கர், ராம்சரண், எஸ்.ஜே சூர்யா கூட்டணியில் கேம் சேஞ்சர் வெளியாகிறது. நேரடி தெலுங்கு படமான இது தமிழில் டைப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.
மேலும் மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் மெட்ராஸ்காரன் நாளை வெளியாகிறது. அடுத்ததாக ஜனவரி 12ஆம் தேதி விஷால், சுந்தர் சி, சந்தானம் கூட்டணியின் மதகஜராஜா வெளியாகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவர உள்ள இப்படத்திற்கு தற்போது உச்சகட்ட எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்ததாக பொங்கல் தினமான ஜனவரி 14 அன்று மூன்று படங்கள் வெளியாகிறது.
ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியில் காதலிக்க நேரமில்லை, அதிதி சங்கர், ஆகாஷ் முரளி நடிப்பில் நேசிப்பாயா படங்கள் வெளியாகிறது.
அதேபோல் கிஷான் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் தருணம் படமும் பொங்கல் திருநாள் அன்று வெளி வருகிறது. இப்படியாக ஏழு படங்கள் இறுதி நேரத்தில் உறுதியாக வர உள்ளது.