வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கிய 8 போட்டியாளர்கள்.. மாட்டுனியா, வெறியோடு காத்திருக்கும் ஆடியன்ஸ்

Biggboss 7: விஜய் டிவியின் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே ரணகளமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. விட்டால் வெட்டு, குத்து என இறங்கி கொலை கேசில் உள்ள போய் விடுவார்களோ என்ற ரேஞ்சுக்கு போட்டியாளர்கள் நடந்து கொண்டதையும் நாம் பார்த்தோம்.

ஆனால் அதுதான் சேனலின் டிஆர்பிக்கு பேருதவியாக இருந்தது. அதற்கு ஏற்றார் போல் மாயா, பூர்ணிமா இருவரும் சேர்ந்து அடித்த லூட்டி கொஞ்ச நெஞ்சம் கிடையாது. அதனாலேயே அவர்களுக்கு வெளியில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது. இதில் மாயா திட்டம் போட்டு காயை நகர்த்துவதில் கில்லாடியாக இருக்கிறார்.

அதனாலேயே நாமினேஷனில் இருந்து அவர் அவ்வப்போது தப்பித்த சம்பவமும் நடந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் எட்டு போட்டியாளர்கள் சிக்கி இருக்கின்றனர். அதன்படி மாயா, அக்ஷயா, அர்ச்சனா, பூர்ணிமா, மணி, ரவீனா, பிராவோ, விசித்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Also read: 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி.. வெளியேற போவது யாரு?

இதில் மாயா நாமினேஷனுக்கு வந்தது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. ரொம்ப நாட்களாக இதைத்தான் எதிர்பார்த்தோம். இப்ப மாட்டுனியா என அவரை வச்சு செய்யவும் ஆடியன்ஸ் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவர் எப்படியும் இதிலிருந்து தப்பித்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போகும் மிக்சர் பார்ட்டி யார் என்று பார்த்தால் அக்ஷயா, பிராவோ இருவரில் ஒருவராக இருக்கலாம். ஏனென்றால் இவர்கள் அந்த வீட்டிற்குள் இருக்கும் ஆடியன்ஸ் போல தான் உள்ளனர். இவர்களால் பிக்பாஸுக்கு எந்த ஒரு சிறப்பான கன்டென்ட்டும் கிடைக்கவில்லை.

அதனால் இவர்களில் ஒருவரின் வெளியேற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம். அதில் அக்ஷயாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க டைட்டில் வின்னரான சரவண விக்ரம் இந்த முறை கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். போன வாரமே அவரை வெளியேற்றுவார்கள் என ஆடியன்ஸ் எதிர்பார்த்தனர். ஆனால் கானா பாலா வெளியேறி இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ஆனாலும் என்ன பிரயோஜனம்.

Also read: அய்யய்யோ அவன் என்ட்ரி மட்டும் இருக்க கூடாது.? மரண பீதியில் தங்களை காப்பாற்ற திட்டம் போடும் Bully Gang

Trending News