சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காதல் கதைனாலே இந்த ஹீரோக்கள்தான்னு பெயர் வாங்கிய 6 அங்கிள்ஸ்.. 45 வயதாகும் சங்கரின் முரட்டு சிங்கிள்

These are the Tamil actors who are famous for being romantic story films: என்னதான் இன்றைய  தலைமுறையினர் ஆக்சன் படங்களை விரும்பினாலும் காதல் படங்களையும், காதலை மெல்லிய முறையில் வெளிப்படுத்தும் நாயகர்களையும் கொண்டாட தவறுவதில்லை. காதல் ஹீரோக்கள் இவர்கள்தான் என பெயர் வாங்கிய நடிகர்கள் இதோ,

கார்த்திக்: பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமான கார்த்திக் அவர்கள் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் காதல் சப்ஜெக்ட் என்றாலே கார்த்திக் தான் எண்ணுமளவு காதல் படங்களினால் புகழின் உச்சம் சென்றார். இவர் நடித்த அக்னி நட்சத்திரம், மௌன ராகம், உள்ளத்தை அள்ளித்தா போன்றவை கார்த்திக்கின் எவர்கிரீன் காதல் திரைப்படங்கள்.

அப்பாஸ்: “எனை காணவில்லையோ நேற்றோடு எங்க தேடிப் பார்க்கிறேன் காற்றோடு” என்று தமிழகத்தில் இளசுகளை காதல் வலையில் கிரங்கடிக்க செய்தார் காதல் தேசம் அப்பாஸ் அவர்கள். படையப்பா,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே போன்ற திரைப்படங்களின் மூலம் காதல் ஹீரோவாக முத்திரை பதித்தார் அப்பாஸ்.

Also read: மணிரத்னம் பட ஹீரோயினுடன் லிவிங் டுகதரில் இருக்கும் சித்தார்த்.. இன்ஸ்ட்டாவில் வைரலாகும் புகைப்படம்

மாதவன்: அலைபாயுதே கண்ணா என்று பெண்களின் பார்வை மாதவனை சுற்றி வட்டமிட்டது எனலாம். மணிரத்தினம் தனது அலைபாயுதே படத்தில் புதுமுகத்தை தேட 33 வயதான மாதவனை கண்டுபிடித்து நடிக்க வைத்ததாக தகவல். படத்தில் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்த அலைபாயுதே மாதவனை மறக்க முடியுமா?

சித்தார்த்: “யாக்கை திரி காதல் சுடர்” என இன்று வரை இந்த ஒரு நடிகருக்கு மட்டும் வயதாகாமல் இளமையாகவே இருக்கிறார் எனலாம். இந்த பாடலை கேட்கும்போது தெறிக்கும் அதிர்வுகள் போல் இவரின் காதல் காட்சிகளிலும் இளமையும் துள்ளலும் இன்று வரை பசுமையாக உள்ளது. பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர் 45 வயதான போதும் இன்று வரை முரட்டு சிங்கிளாக இருக்கிறார் இந்த சித்தார்த்

பிருத்திவிராஜ்: பாரிஜாதம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரித்விராஜ், மொழி, நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களின் மூலம்  நன்கு அறியப்பட்டார் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருக்கும் இந்த கேரளத்து மாப்பிள்ளைக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பெண் ரசிகர்கள் அதிகம்.

அரவிந்த்சாமி:  மாப்பிள்ளை அரவிந்த்சாமி போல வேணும் என்று தமிழ்நாட்டு பெண்கள் விரும்பும் மாப்பிள்ளை பிராண்ட் ஆகிப் போனார் அரவிந்த்சாமி மணிரத்தினத்தின் வரவாக தளபதி ரோஜா மற்றும்  பம்பாய் போன்ற படங்களில் ஸ்மார்ட் ஆன காதலன் கதாபாத்திரங்களில் பிரபலமான அரவிந்த்சாமி குறைவான படங்களை நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Also read: ஸ்டைலிஷ் சாக்லேட் பாய் அரவிந்த்சாமிக்கு செட்டாகாத 4 படங்கள்.. சித்தார்த் அபிமன்யு வாங்கிய மரண மொக்கை

Trending News