புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நீங்க ஜெயிலர் படம் பாக்குறதுக்கு முக்கியமான 8 காரணங்கள்.. நாளுக்கு நாள் எகிறும் இதயத்துடிப்பு

Jailer Movie: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம்  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருப்பதால், இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான தியேட்டர்களில் முதல் ஒரு வாரத்திற்கான முன்பதிவு  நிகழ்வடைந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களுக்கு டிக்கெட் புக் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு  இந்த எட்டு காரணம் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் நாளுக்கு நாள் இதய துடிப்பு எகிறுகிறது. ஏனென்றால் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரை பார்க்கும் போதே அவருடைய லுக் மற்றும் கான்பிடன்ட் அளவு கடந்து இருந்தது.

Also Read: நெல்சனால் இமயமலைக்கு சென்ற ரஜினி.. ஜெயிலரை பார்த்த பின் ஏற்பட்ட குழப்பம்

அதனால் இந்த படம் நிச்சயம் நன்றாக வந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம்.  அது மட்டுமல்ல ஜெயிலர் படத்தின் ட்ரெய்லரும் கொல மாஸாக இருந்தது. மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்  இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சாட் பஸ்டட்டு பாடல்களாக இருந்தது.

அது மட்டுமல்ல இந்த படத்தின் வில்லன் வினாயகன் உடைய மிரட்டலான நடிப்பு, நிச்சயம் சூப்பர் ஸ்டாருக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் டார்க் காமெடி மற்றும் எமோஷனுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். ஏனென்றால் டிரைலரில் ரஜினி தன்னுடைய மனைவி, மகன், பேரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களோடு இருப்பதால் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read: ரஜினிக்கு பிடித்த சரக்கு மற்றும் சிகரெட் பிராண்ட் இதுதான்.. ஒரு நாளைக்கு இத்தனை பாக்கெட் குடிப்பாரா.?

இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எனவே இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயத்தையும் நெல்சன் செய்திருப்பதால், நிச்சயம் இந்த படம் அவருக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எட்டு விஷயங்களும் நிச்சயம் ஜெயிலர் படத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் 90% ரசிகர்கள் படத்தை பார்க்க நினைக்கின்றனர். அண்ணாத்த படத்திற்கு நடந்தது ஜெயிலருக்கு நடந்து விடக்கூடாது என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கில் கொண்டாட வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

Trending News