August 15 Release Movies: மே மாதத்திற்கு பிறகு தமிழில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தொடங்கிவிட்டது. அரண்மனை 4, கருடன், மகாராஜா, இந்தியன் 2 வரிசையில் ஆகஸ்ட் மாதம் நிறைய படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
அதில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நான்கு படங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன. ஏற்கனவே இந்த தேதியில் தங்கலான் ரிலீஸ் ஆகும் அறிவிப்பு வெளிவந்தது. கடந்த சில வருடங்களாக விக்ரம் இப்படத்திற்காக கடின உழைப்பை கொடுத்து வந்தார்.
அதனாலேயே அவருடைய ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். மேலும் இப்படம் சோலோவாக தான் வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் மூன்று படங்கள் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது.
அந்த வகையில் பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் இன்னும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது. 5 வருடங்களாக ரிலீசாக முடியாமல் தவித்த இப்படம் பிரசாந்துக்கு ஒரு ரீ என்ட்ரி ஆக அமைந்துள்ளது.
சுதந்திர தினத்தில் ரிலீஸ் ஆகும் 4 படங்கள்
இதற்கு அடுத்து விஜய்யுடன் அவர் நடித்த கோட் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கிறது. அப்படத்திற்கு பிறகு இவர் அடுத்தடுத்த படங்களில் பிசியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதற்கு அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் டிமான்டி காலனி 2 ஆகஸ்ட் 15ஆம் தேதியை குறி வைத்துள்ளது. இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ஆடியன்ஸை கலங்கடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா சுதந்திர தின ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது. ஹிந்தி தெரியாது போடா, ஹிந்தி திணிப்பு போன்றவை வைரலாகி வரும் நிலையில் இப்படம் அதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் படத்தின் டைட்டிலே பாக்யராஜ் படத்தின் ஃபேமஸான வசனம் தான். அதனாலேயே இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியாக இந்த நான்கு படங்களும் ஒரே நாளில் கூட்டமாக வருகிறது. இதில் தங்கலான் தல தப்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.