செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிரபுதேவாவுடன் டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. சுயரூபம் தெரிந்து பின்னங்கால் பிடரியில் பட ஓடிய கண்ணழகி

Actor Prabhudeva: தமிழ்நாட்டு மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா ஒரு நடன இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோ, இயக்குனர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் குறித்து வெளிவராத சர்ச்சைகளே கிடையாது. அந்த வகையில் பல ஹீரோயின்களுடன் இவர் டேட்டிங் செய்த கதையும் இருக்கிறது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

மீனா: இவர் பிரபுதேவா உடன் இணைந்து நாம் இருவர் நமக்கு இருவர், டபுள்ஸ், வானத்தைப்போல உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் டபுள்ஸ் படத்தில் நடிக்கும் போது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள இருந்த இந்த ஜோடி திடீரென பிரேக் அப் செய்தனர். இதற்கு முக்கிய காரணம் பிரபுதேவாவுக்கு வேறு சில பெண்களுடனும் சகவாசம் இருக்கிறது என்ற விவகாரம் மீனாவுக்கு தெரிய வந்தது தான். அதைக் கேட்டதுமே உன் சங்காத்தமே வேண்டாம் என்று அவர் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டாராம்.

Also read: பிரம்மாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய கேடி.குஞ்சு மோகனின் 5 படங்கள்.. இப்ப வர பிரபுதேவா உருட்டும் ஒரே படம்

கௌசல்யா: இவர் பிரபுதேவா உடன் இணைந்து வானத்தைப்போல, மனதை திருடி விட்டாய், ஜேம்ஸ் பாண்ட், ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே இவர்களுக்குள் ஒரு நெருக்கம் இருந்ததாக திரையுலகில் சலசலக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் அது கிசுகிசுவாகவே மாறிப்போனது.

சிம்ரன்: விஐபி, டைம் உள்ளிட்ட படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இருக்கின்றனர். அதிலும் இவர்களின் நடனம் மற்றும் கெமிஸ்ட்ரி திரையில் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. அதனாலேயே இவர்களுக்குள் ஒரு நெருக்கம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இது திருமணம் வரை செல்லவில்லை. அதை தொடர்ந்து சிம்ரன், பிரபுதேவாவின் அண்ணனை காதலித்த ஒரு கதையும் இருக்கிறது.

Also read: நயன்தாராவுக்கு முன் வாரிசு நடிகையை வெறித்தனமாக காதலித்த பிரபுதேவா.. நாட்டாமை என்ன செஞ்சாரு தெரியுமா?

ஹன்சிகா: பிரபுதேவா இயக்கத்தில் வெளியான எங்கேயும் காதல் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஹன்சிகா பிறகு அவருடன் இணைந்து குலேபகாவலி படத்திலும் நடித்திருந்தார். அதனாலயே இவர்கள் குறித்து பல செய்திகள் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இருவரும் டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. அதை தொடர்ந்து சிம்புவுடன் காதலில் விழுந்த ஹன்சிகா இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.

நயன்தாரா: இவருக்கும் பிரபுதேவாவுக்கும் இருந்த காதல் ஓர் உலகத்திற்கே தெரியும். உருகி உருகி காதல் செய்த இந்த ஜோடி திருமணம் வரை வந்தது. அதிலும் நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டு அலைந்த காலமும் உண்டு. ஆனால் பல கருத்து வேறுபாடுகளின் காரணமாக இந்த ஜோடி பிரேக் அப் செய்து பிரிந்தனர். அதை தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவனையும், பிரபுதேவா ஒரு டாக்டரையும் திருமணம் செய்து கொண்டார்கள்.

Also read: பிரபுதேவாவுடன் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. லிவிங்ஸ்டன் ஸ்கோர் செய்த படம்

Trending News