சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

டிக்கெட் 2000 ரூபாயா.! GOAT பார்க்க முடியலைன்னா BOAT பக்கம் வாங்க, ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்

This Week Ott Release: விஜய் நடித்துள்ள கோட் இதோ அதோ என்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி நாளை திரைக்கு வர இருக்கிறது. படம் வெளிவருவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

இன்னும் சிலர் 2000 ரூபாயை தாண்டி அதிக விலைக்கு விற்கும் டிக்கெட்டை வாங்க முடியாத சூழலில் இருக்கின்றனர். இப்படி கோட் படம் பார்க்க முடியவில்லை என வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்த வார இறுதியை பின்வரும் ஏழு படங்களோடு என்ஜாய் செய்யலாம்.

அதன்படி இந்த வாரம் யோகி பாபு நடிப்பில் வெளியான போட் அமேசான் ப்ரைம் தளத்தில் 6ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஹிந்தி படமான கில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

மேலும் நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா ஆஹா தமிழ் மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் செப்டம்பர் 6 வெளியாகிறது. அதேபோல் மலையாள படமான பவி கேர்டேக்கர் நெட்ப்ளிக்ஸ் மற்றும் சிம்ப்ளி சவுத் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

இதன் தொடர்ச்சியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படமும் இந்த வாரம் வெளியாகிறது. அடுத்ததாக பஹத் பாசில், சௌபின் ஷாகீர் நடிப்பில் வெளிவந்த இருள் ஆகா தமிழ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

தொடர்ந்து ஜியோ சினிமாவில் fall guy ஹாலிவுட் மூவி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இப்படியாக கோட் படம் பார்க்க முடியாதவர்கள் ஓடிடி படங்களை பார்த்து தங்களை ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.

வார இறுதியை மகிழ்விக்க வரும் படங்கள்

Trending News