புதன்கிழமை, ஜனவரி 8, 2025

‘CM HELPLINE CITIZEN’ மக்களின் குறைகளைத் தீர்க்கும் செயலியை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்.. குவியும் பாராட்டுக்கள்!

தமிழகத்தில் வரும் மே மாதம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் CM HELPLINE CITIZEN’  என்ற செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் பழங்கால முறைப்படி பெட்டியில் புகார்களை சேகரித்து தீர்வு காணப் போவதாக பிரச்சாரத்தில் பில்டப் விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே 1100 அலைப்பேசி எண்ணின் மூலம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் எளிதாக தங்களது புகார் மனுக்களை தெரிவிக்கலாம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

அதேபோல் ‘CM HELPLINE CITIZEN’  என்ற செயலியின் மூலம் 24 மணி நேரமும் மக்கள் தங்கள் குறைகளை புகாராக பதிவிடலாம். இந்த முறையின் மூலம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் குறிப்பிட்ட கால வரம்புக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும்.

CM-helpline
CM-helpline

அதற்காக மனுதாரரிடமிருந்து ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண் கேட்கப்பட்டு, அதன்பின் மனுக்களின் மீது எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் மனுதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்களை உடனடியாக தெரிவிக்கப்படும்.

Edappadi K. Palaniswami
Edappadi K. Palaniswami

எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது தொலைநோக்கு சிந்தனையால், 1100 அலைபேசி எண் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் என நவீன குறைதீர்ப்பு யோசனையை செயல்படுத்தி வருவதால், தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பலர் தரப்பிலிருந்து பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

Trending News