திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தால் அதை திருவிழா போல் கொண்டாடி அந்த படத்தை வெற்றி பெற வைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் வெறித்தனமாக தங்கள் அன்பை காட்டி வருகின்றனர்.

இது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் தெரிந்தோ தெரியாமலோ ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பெயரை கெடுத்து விடுகிறார்கள். அதிலும் சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் விஜய், அஜித் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் பயங்கர வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வருகிறது.

Also read: உதயநிதியை போல் உருவாகும் அடுத்த வாரிசு.. சம்பளம் கூட கொடுக்காமல் இழுத்தடிக்கும் பரிதாபம்

பலரும் பார்க்கும் சோசியல் மீடியாவில் அவர்கள் மோசமான வார்த்தைகளால் பேசுவதும் சண்டையிடுவதும் என்று பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே மீண்டும் ஒரு பெரிய சண்டை வெடித்திருக்கிறது. அதாவது துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான சில்லா சில்லா வரும் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் அதுவரை பொறுக்க முடியாத ரசிகர்கள் எப்படியோ அந்த பாடலின் 10 வினாடி காட்சியை தற்போது ரகசியமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் இவ்வாறு ஒரு சம்பவம் செய்திருப்பது படு குழுவினரை கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. இதனால் பாடலுக்கான வரவேற்பு குறையும் என்றும் அவர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

Also read: ஏ ஆர் முருகதாஸை வெறுத்து ஒதுக்கிய அஜித், சிக்கிய விஜய்.. இன்று வரை இணையாததற்கு இதுதான் காரணம்

ஏற்கனவே துணிவு திரைப்படத்தின் அப்டேட் தாமதமாக வெளியாவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த செயலை செய்தது விஜய் ரசிகர்கள் தான் என்று அஜித் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே விஜய்யின் வாரிசு திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்த போட்டோக்கள் வெளியான போதும் இதே தான் நடந்தது.

அஜித் ரசிகர்கள் தான் திட்டம் போட்டு இப்படி ஒரு வேலையை செய்ததாக விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். தற்போது அஜித்துக்கும் அதே போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்கள் இப்படி அடித்துக் கொள்வது ஆரோக்கியமற்ற செயலாகவே கருதப்படுகிறது. இது வேறு மாதிரி சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்கள் தங்கள் அன்பை இந்த வகையில் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also read: வாரிசு படத்தை போல் துணிவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் உச்சகட்ட டென்ஷனில் அஜித்

Trending News