வியாழக்கிழமை, நவம்பர் 7, 2024

TVK மாநாடுன்னு அழைச்சாங்க, இப்போ பிச்சைக்காரனா அலையறேன்.. விஜய் மீது பரபரப்பு புகார்

தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகிறது. இக்கட்சியில் கொடி அறிமுகம் செய்யப்பட்டு, பாடலும் வெளியானது. அதைத் தொடர்ந்து டுவிட்டரில் அறிக்கை மட்டும் வெளியிட்டு வந்த விஜய், அக்டோபர் 27 ஆம் தேதி வி.சாலையில் வெற்றிக் கொள்கை திருவிழா என்ற பெயரில் தவெகவின் முதல் மாநாட்டை நடத்திக் காட்டினார்.

அவருக்கு திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிகளிடம் இருந்தும் ஆதரவு வரவில்லை. ஆனால் அவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இருப்பதாக தொண்டர்கள் கூறினர். அதேபோல் 10 லட்சம் தொண்டர்கள் அம்முதல் மா நாட்டில் கலந்துகொண்டு மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அக்கூட்டத்தில் விஜய், திமுக, பாஜக சீண்டியதுடன், சீமானையும் வம்பிழுத்தார். இதையடுத்து, திராவிட கட்சிகள் எதுவும் பேசவில்லை என்றாலும் சீமான் மேடை போட்டு விஜயின் பெயரையும் அவரது கட்சியையும் என்ன பேச முடியுமோ பேசினார். அவரது தம்பிகளும் தங்கள் கடமைக்கு விஜய்யை ட்ரோல் செய்தனர்.

தவெக தலைவர் விஜய் மீது டிரைவர் பகீர் குற்றச்சாட்டு

இப்படி விஜய்க்கு கட்சி ஆரம்பித்ததும் இத்தனை எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது ஓட்டுனர் ஒருவர் விஜய் மீது புகார் கூறியுள்ளார். குரோம்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கான ஆக்டிங் டிரைவர் வேண்டும் என்று என்னை மைலாப்பூர் மோகன் டிராவல்ஸ்ல இருந்து எனக்கு கால் பண்ணீருந்தாங்க அக்டோபர் 26 ஆம் தேதி நைட்டு. நான் போன் எடுத்து வருவதாக கூறினேன். சம்பளம் இதெல்லாம் கூறி எத்தனை நாளோ அதுக்கு சம்பளம் தருவதாக கூறினர்.

அடுத்த நாள் காலையில் 10 வண்டியில் கிளம்பி அங்கங்கு நின்றிருந்த தொண்டர்களை அழைத்து வரும்படி கூறினர். அதேபோல் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்துச் சென்றோம். அங்கு காலையும் மதியமும் தான் சாப்பாடு. அதன்பின் அங்கு நீரும் இல்லை, சாப்பாடும் இல்லை.பார்கிங்கும் இல்லை. ஒரு வயலில்தான் வண்டியை போட்டோம். இரவு எடுக்கமுடியவில்லை. அங்கு சாப்பாடும் இல்லை நீருமில்லை.

தொண்டர்களை இறக்கிவிட்ட பின் என் வேலை முடிந்த பின் சம்பளம் போடுங்கள் என்றேன். அதிகாலையில் அக்கவுண்ட்ஸில் வேலையில் இருப்பவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். காலையில் சம்பளம் தருவதாக கூறினர். ஆனால், அன்றும் அடுத்த நாளும் சம்பளம் கேட்டேன். ஆனால் தரவில்லை. விஜய் அலுவலகம் சென்றேன். என்னை அவமானப்படுத்தி வெளியே துரத்தினர்.

நான் போலீஸ் ஸ்டேசனின் புகார் அளித்தேன். மீண்டும் பயத்திலேயே விஜய் அலுவலகம் சென்றேன். என்னை முறைத்து பார்த்து அடிக்க வருவதுபோல் அலுவலர்கள் செயலில் ஈடுபட்டனர்.போலீஸார் சமரசம் பேசுவதாக கூறினர். 27 ஆம் தேதியில் இருந்து இப்போது வரை நான் வேலைக்குப் போகவில்லை. இச்சம்பளத்திற்காக சாப்பிடாமல் பிச்சைக்காரனாக அலைந்துவருகிறேன். நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

எப்படி சம்பளம் கொடுக்காமல் போவார்? ரசிகர்கள் கேள்வி

தவெக தலைவர் விஜய் மீது இவர் கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் கட்சி அலுவலர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்? அவர் எத்தனையோ உதவிகள் செய்தவர், இவர் வேலை செய்ததற்கு எப்படி சம்பளம் கொடுக்காமல் போவார்? என தொண்டர்களும் அரசியல் நடுநிலையாளர்களும் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News