திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திரிஷா விஷயத்துல அவங்க பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. அடாவடியில் முடிந்த மன்சூரின் பிரஸ் மீட்

Trisha and Mansoor Alikhan: நடிகை திரிஷாவை பற்றி அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தொடர்ந்து சர்ச்சை எழும்பி வருகிறது. அத்துடன் இவர் பேசியது தவறு என்று பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதாவது சமீபத்தில் மன்சூர் அலிகான், லியோ படம் சம்பந்தமாக பத்திரிகையாளரிடம் பேசியிருக்கிறார். அதில் இப்போதெல்லாம் வில்லன்களுக்கு முன்னாடி மாதிரி நடிகைகளுடன் இருக்கும் காட்சிகள் எதுவும் இருக்க மாட்டேங்குது என்று சொல்லி இருக்கிறார்.

அதிலும் லியோ படத்தில் திரிஷாவை என் கண்ணில் காட்டாமல் அப்படியே கூட்டு வந்து கூட்டு போய் விட்டார்கள் என்று கொஞ்சம் வன்மமாக பேசி இருக்கிறார். இதை கேட்ட த்ரிஷா, மன்சூருக்கு டுவிட்டரில் சரியான பதிலடி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து லோகேஷ் மற்றும் பல பிரபலங்களும் மன்சூர் பேசியது தவறு என்று அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள்.

இந்த சூழ்நிலையில் நடிகர் சங்க தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார்கள். அத்துடன் த்ரிஷாவை பற்றி அநாகரிகமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதற்கு மன்சூர் அலிகான் நடிகர் சங்கம் என்னுடைய விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்து விட்டார்கள். அவர்கள் என் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை கேட்கவே இல்லை.

Also read: இந்த 5 சம்பவம் நடக்கும் போது கோமாவுல இருந்தீங்களா திரிஷா.? மன்சூர் சர்ச்சையின் அதிர வைக்கும் பின்னணி

என்னுடைய விளக்கத்தை கேட்காமல் அவர்கள் என் மீது குற்றம் சாட்டுவது தவறு. அத்துடன் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியது தொடர்பாக நடிகர் சங்கம் என்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது என் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை நான் எப்படி தெரிவிக்க முடியும். எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை.

அதனால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை. என் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியிருக்கிறார். அத்துடன் மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் என் பக்கம் தான் இருப்பார்கள். என்று மன்சூர் அலிகான் பிரஸ்மீட்டில் அடாவடியாக பேசி உள்ளார். இதனை அடுத்து மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி அநாகரிகமாக பேசியதற்கு தேசிய மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இன்னொரு பக்கம் வலியுறுத்தி வருகிறார்கள்.

அதனால் தேசிய மகளிர் ஆணையம் தற்போது தானாகவே முன்வந்து விசாரணையை துவக்கி உள்ளார்கள். பெண்ணை அவமதித்த வகையில் மன்சூர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.

Also read: விஜய், திரிஷா கிட்ட இருந்து இத கத்துக்கோங்க பாஸ்.. உச்சாணி கொம்பில் இருப்பதன் காரணம்

Trending News