கேப்டன் விஜயகாந்த் சினிமாவிலும், அரசியலிலும் வெற்றிகரமான இருந்தவர். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் இறந்த பின்னும், விஜயின் தி கோட் படத்தில் ஏஐ மூலம் அவரை திரையில் நடிக்க வைத்தனர்.
லப்பர் பந்து படத்திலும் அவரது பட பாடலை ஒலிக்கவிட்டனர். அதுவும் ஹிட்டானது. இப்படி விஜயகாந்த் இறந்தாலும், அவரை பற்றி சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குனர் பா.ரஞ்சித்தும் விஜயகாந்த் பற்றி அவர் மாணவராக இருந்தபோது நடந்த சம்பவத்தைப் பற்றி கூறினார்.
சென்னையில் 22வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல மொழியில் 100 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது.
இவ்விழாவில் பங்கேற்ற பா.ரஞ்சித், “நான் அப்போது 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வசனத்தை என்னால் கூறமுடியவில்லை. அதனால், கேப்டன் பிரபாகரன் பட்த்தில் வரும் ஆட்டமா தேரோட்டாமா பாடலுக்கு என்னை டேன்ஸ் ஆட வைத்தனர்.
நான் நன்றாக ஆடினேன். அதனால் ஒன்ஸ் மோர் கேட்டனர். இந்த சம்பவத்துக்கு பிறகு நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது கதை எழுதத் தொடங்கினேன்.
அப்போதுதான் விஜய்காந்த் சாரை வில்லனாக கற்பனை செய்து கதை எழுதினேன். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்” என்று கூறினார்.