ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தியாகராஜன் குமாரராஜாவின் மூன்றாவது படம்.. இப்பவே டோக்கன் போடும் 10 பிரபல ஹீரோக்கள்

ஆரண்ய காண்டம் படம் முதல் சூப்பர் டீலக்ஸ் படம் வரை என மிக நீளமாக சொல்ல முடியாது ஏனென்றால் தியாகராஜன் குமாரராஜா இயக்கியது இரண்டு படங்கள்தான். ஆனால் இரண்டு படங்களுமே இரண்டு தலைமுறைக்கு பேச வைக்கும் படம்.

பல வெளிநாட்டு படங்களை பார்த்தவர்களுக்கு தியாகராஜன் குமாரராஜா சொல்ல வருவதை சற்று சுலபமாக புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் அவர்களின் படங்களில் எந்த அளவுக்கு வன்முறை காட்சிகள் மற்ற 18+ காட்சிகள் இருக்கிறதோ அதே அளவு இவரது படங்களில் இருக்கும்.

இவர் நாட்டுக்காகலாம் படம் எடுக்கற ஆளில்லை ஆனால் மனிதர்களின் வாழ்க்கை முறையை மிகவும் அழகாக சொல்லக்கூடியவர். தற்போதைய இயக்குனர்களில் மனிதர்களுக்கு இருக்கும் உணர்வுகளை தெளிவாக சொல்ல கூடிய இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின் போன்றவர்கள் மட்டும்தான் .

Vijay Sethupathi - Thiyagaraajan kumararaja
Thiyagaraajan Kumararaja – Vijay Sethupathi

தற்போது தியாகராஜன் குமாரராஜா மூன்றாவதாக ஒரு படத்தை எடுக்க உள்ளார். முதல் இரண்டு படங்களுக்கான இடைவெளி எட்டு வருடங்கள் இருந்தது. ஆக அவருடைய அடுத்த படம் ஒரு பத்து வருடமாக இருக்கும் என நினைத்துக் கொண்டு இருந்தவர்கள் மத்தியில் திடீரென மூன்றாவது படத்தின் அறிவிப்பை வெளியிட உள்ளார் தியாகராஜன் குமாரராஜா.

ஆரண்ய காண்டம் சூப்பர் டீலக்ஸ் படங்களை பார்த்த நடிகர்கள் நடிகைகள் ஏன் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு கூட பலர் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஹீரோ ஹீரோயின் என்றெல்லாம் அவரது படங்களில் கிடையாது. அவர் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவருமே விருது வாங்குவதற்கான நடிப்பாக தான் இருக்கும்.

தியாகராஜன் குமாரராஜா வின் மூன்றாவது படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக எடுக்க இருக்கிறாராம். அதுவும் இந்தப் படம் இந்தியாவில் பயன்படுத்தாத ஒரு டெக்னாலஜியை பயன்படுத்த போகிறாராம்.

இந்த படத்தில் குறைந்தது 10 ஸ்டார்கள் நடிப்பார்கள் என கூறுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க கட்டுப்படியாகாது என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் அனைவருக்குமே வாங்கப்படும் கால்ஷீட் வெறும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் தான்.

அனைவரும் இரண்டு காட்சிகளில் நடித்து விட்டுப் போனால் போதும் என்றே இருக்கின்றனர். ஏனென்றால் தியாகராஜன் குமாரராஜா படத்தில் ஒரு காட்சியை பத்து நிமிடத்திற்கு செல்லும்.
தரமான படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இவருடைய மூன்றாவது படம் ஒரு நம்பிக்கை கொடுக்கும். மேலும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் எனவும் தெரிகிறது.

Trending News