செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்தியை முடிச்சு விடப்போகும் தில்லைநாதன்.. எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றும் ஹாஸ்டல் வார்டன்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக அன்பு தன் மீது விழுந்த பழியை நீக்கி விட்டான்.

அது மட்டும் இல்லாமல் நேற்றைய எபிசோடில் அன்புவின் அம்மா லலிதா என் மகனையும் மருமகளையும் இவ்வளவு கஷ்டப்படுத்தும் இந்த கம்பெனி எங்களுக்கு தேவையே இல்லை என்று சொல்லி விடுகிறார்.

முடிச்சு விடப்போகும் தில்லைநாதன்

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தில்லைநாதன் அன்பு மற்றும் ஆனந்தியைத் தேடி வீட்டிற்கு செல்வது போல் காட்டப்படுகிறது.

தில்லைநாதனின் வற்புறுத்தலால் மீண்டும் அன்பு ஆனந்தி கம்பெனிக்கு செல்ல முடிவெடுத்தால் அதைத்தொடர்ந்து பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.

மேலும் அடிபட்ட பாம்பாய் காத்திருக்கும் அரவிந்த் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதே நேரத்தில் மகேஷ் ஹாஸ்டல் வார்டனை தேடிச் செல்கிறான்.

அம்மா பாசத்தில் மகேஷ் பண்ணும் தப்பை எல்லாம் மறந்துவிட்டு மனோன்மணியம் அவனை அரவணைத்துக் கொள்கிறார்.

இதனால் தொடர்ந்து மகேஷ் ஹாஸ்டலுக்கு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது. இது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதற்கு சமமாகிவிடும்.

தில்லைநாதனின் பேச்சை கேட்டு அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் கம்பெனிக்கு செல்கிறார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement Amazon Prime Banner

Trending News