தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாகவும் வாழ்க்கையில் நண்பர்களாக வாழ்ந்து வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். சினிமா துறையில் இவர்கள் இருவரும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு ஒரு ரசிகர் கூட்டம் என்றால் கமல்ஹாசனின் நடிப்பிற்கு மற்றொரு கூட்டம் உள்ளது. அந்த அளவிற்கு இவர்கள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
ரஜினிகாந்தின் வாழ்க்கையில் முக்கியமான படம் என்றால் தில்லு முல்லு தான். இந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல் கமல்ஹாசன் வாழ்க்கையில் ஏராளமான படங்களில் வித்தியாசம் வித்தியாசமாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள திரைப்படம் தான் அவ்வை சண்முகி.
தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி பார்த்தால், தில்லு முல்லு படத்தில் ரஜினியின் நண்பராக நாகேஷ் நடித்திருப்பார். நாகேஷ் ஒட்டு மீசையை எடுத்து முகத்தில் ஓட்டுவார், அதை பார்த்து ரஜினிகாந்த் மீசை இருந்தால் சந்திரன், மீசை இல்லாமல் இருந்தால் இந்திரன் என இரண்டு கதாபாத்திரம் உருவாகும்.
அதே போல் தான் கமல்ஹாசனும் அவ்வை சண்முகி படத்தில் மீசை இருந்தால் பாண்டியனாகவும் மீசை இல்லாமல் இருந்தால் அவ்வை சண்முகியாகவும் நடித்திருப்பார். இந்த 2 திரைப்படங்களிலும் நாகேஷின் கதாபாத்திரம் ஒத்துப் போயிருக்கும்.
இவரை வைத்து தான் இரட்டை வேட கதாபாத்திரம் உருவாகி இருக்கும், அவ்வை சண்முகி படம் உருவானதற்கு தில்லு முல்லு படம் தான் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. அவ்வை சண்முகி என்ற கமலின் கதாபாத்திரத்தை K S ரவிக்குமார் மிக அற்புதமாக கையாண்டிருப்பார்.