ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களிலேயே ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த படம் என்றால் அது தில்லுமுல்லு திரைப்படம் தான். அந்த அளவிற்கு ரஜினிகாந்த் இப்படத்தில் தனது இரட்டை வேட நடிப்புத் திறமையால் பல ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பார்.
அதிலும் குறிப்பாக வேலை கொடுக்கும் முதலாளியிடம் இவர் செய்யும் சேட்டைகள் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின்பு வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக அதே முதலாளியிடம் பல பொய்களை தில்லு முல்லாக பேசி வேலையை தக்க வைத்துக் கொள்வது தான் படத்தின் சுவாரசியம்.
இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தது எந்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்கு இப்படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல நடிகரை கொண்டாடினார்கள். அது தான் ரஜினியின் முதலாளி தேங்காய் சீனிவாசன்.
இவர் நடிப்பிற்கு ஒரு காலத்தில் ரசிகர்கள் தாண்டி சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருந்துள்ளனர். அந்த அளவிற்கு அவருடைய தனித்துவமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக முகத்தை கோபமாக வைத்து காமெடியாக பேசுவதில் கைதேர்ந்தவர்.
இவரது நடிப்பை பார்த்து 2013 ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிகையில் தமிழ் சினிமாவின் சிறந்த 25 நடிகர்களில் பெயர்கள் பட்டியலிட்டது. அதில் தேங்காய் சீனிவாசனின் முழு காமெடி கலந்த தில்லு முல்லு படத்தின் கதாபாத்திரம் தான் இந்த பாராட்டை வாங்கி கொடுத்தது.
ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருப்பது தில்லுமுல்லு. ஆனால் இப்படம் வெளிவந்த காலத்தில் ரஜினிகாந்த் நடிப்பை விட தேங்காய் சீனிவாசன் நடிப்பைப் பார்த்து மக்கள் பலரும் தேங்காய் சீனிவாசன் தான் ஹீரோ என கூறியுள்ளனர்.