வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கோடிகளை இறைக்கும் திருச்சிற்றம்பலம்.. வசூல் சக்கரவர்த்தியாக தனுஷ்

சமீபகாலமாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்ற படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று நடிகைகள் நடித்திருந்தனர்.

மேலும் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தொடர்ந்து படங்கள் தோல்வி மற்றும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியை திருச்சிற்றம்பலம் கொடுத்துள்ளது.

Also Read :தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது

இப்படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கார்த்தியின் விருமன் படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வந்தது. அதன் பின்பு குறைந்த திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தியேட்டர்கள் அதிகபடியாக ஒதுக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் படம் வெளியான 4 நாட்களிலேயே 50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்களை நெருங்கிய நிலையில் 65 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்னும் சில தினங்களிலேயே திருச்சிற்றம்பலம் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read :மனைவியை பிரிந்த சோகத்தில் நைட் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்.. வாரிசு நடிகையுடன் வைரல் புகைப்படம்

ஜகமே தந்திரம், மாறன், தி கிரே மேன் என தொடர் தோல்வியை சந்தித்து வந்த தனுசுக்கு ஆறுதலாக திருச்சிற்றம்பலம் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் மற்ற நடிகைகளை காட்டிலும் நித்யா மேனனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு நித்யா மேனனுக்கும் உண்டு. இந்நிலையில் வரும் வாரங்களில் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் இரட்டிப்பாக அதிக வாய்ப்புள்ளது.

Also Read :திருச்சிற்றம்பலம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வரிசையில் சேருமா.? ஆறே நாளில் வாயை பிளக்க வைத்த வசூல்

Trending News