திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

திருடா திருடா சந்திரலேகாவா இது?. செம ஷாக் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்

Thiruda Thiruda movie Actress Anuagarwal latest photo: மணிரத்தினம் இயக்கத்தில் 90களில் வெளியான வித்தியாசமான காதல், ஆக்சன், கண்டெய்னர் லாரியில் பணம் கடத்தல், ரயில் ஃபைட் என செம என்டர்டைன்மென்ட் படமாக அமைந்தது தான் திருடா திருடா திரைப்படம். இந்த படத்தில் இடம்பெற்ற சேசிங், ஆக்ஷன் காட்சிகள் என படம் முழுக்க விறுவிறுப்பாகவே இருக்கும்.

இதில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா, அனு அகர்வால், எஸ் பி பாலசுப்ரமணியம், சலீம் கௌஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அதிலும் இந்த படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் அனு அகர்வால் ‘சந்திரலேகா’ என்ற பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடினார். இந்த பாடல் இன்றும் இளசுகளை துள்ளி குதிக்க வைக்கிறது.

இதில் சந்திரலேகாவாக நடித்து அசத்திய நடிகை அனு அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிறது. அனு அகர்வால் தமிழில் திருடா திருடா படத்தை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் பிரபல மாடலான இவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

Also Read: பிரசாந்த் கொடுத்த தரமான 5 சூப்பர் ஹிட் படங்கள்.. 90களில் ரஜினி, கமலுக்கு தண்ணி காட்டிய டாப் ஸ்டார் 

திருடா திருடா படத்தின் சந்திரலேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

1996ல் வெளியான ரிட்டர்ன் ஆஃப் ஜூவல் தீஃப் என்ற ஹாலிவுட் படத்தில் இளவரசி விஷாகாவாக நடித்த பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகினார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த பலரும் திருடா திருடி படத்தின் சந்திரலேகாவா இது! என செம ஷாக் ஆகி உள்ளனர்.

ஏனென்றால் அந்தப் படத்தில் செம க்யூட்டாக இருக்கக்கூடிய அனு அகர்வால், இப்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் கிழவி போல் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

 நடிகை அனு அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம்

anuagarwal-cinemapettai
anuagarwal-cinemapettai

Also Read: திருட்டை மையமாக வைத்து வெற்றி கண்ட 6 படங்கள்.. சதுரங்க வேட்டையில் நவீன திருட்டை கற்றுக் கொடுத்த நட்டி

Trending News