இப்போது புதிய தொடர்களை ஒளிபரப்பு செய்வதை காட்டிலும் சன் டிவி முன்பு வெளியான சூப்பர் ஹிட் தொடர்களை மறுஒளிபரப்பு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் அப்போது கூட்டு குடும்பமாக அதில் நடக்கும் சண்டைகள், சந்தோஷங்கள் என கதை நன்றாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் இப்போது உள்ள எந்த தொடரை எடுத்துக் கொண்டாலும் இரண்டு மனைவி, இரண்டு கணவன் என்று ஒரே கதையை உருட்டுவது போல தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் திருமுருகனின் சூப்பர் ஹிட் சீரியலை மறுஒளிபரப்பு செய்ய உள்ளனர்.
அந்த வகையில் திருமுருகன் மெட்டி ஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற தொடர்களை இயக்கியிருந்தார். இதில் சூப்பர்ஹிட் அடித்த தொடர்கள் என்றால் மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம்.
மீண்டும் ஒளிபரப்பாகும் திருக்குமரனின் சூப்பர் ஹிட் சீரியல்
அதிலும் குறிப்பாக மெட்டி ஒலி தொடர் 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை வெற்றிகரமாக ஓடியது. ஒரு தந்தை ஐந்து பெண் பிள்ளைகளை வளர்த்து அவர்களை எவ்வாறு கரை சேர்க்கிறார் என்பதுதான் இந்த தொடரின் கதை.
இந்த தொடரை அவ்வளவு விறுவிறுப்பாக இயக்குனர் கொண்டு சென்றிருந்தார். டெல்லி குமார், போஸ் வெங்கட், சாந்தி வில்லியம்ஸ், காயத்ரி சாஸ்திரி, காவேரி, சேத்தன் என பல பிரபலங்கள் இந்த தொடரில் நடித்திருந்தனர்.
இந்த தொடர் ஏற்கனவே சன் டிவியில் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்போது விகடன் யூடியூப்பில் விகடன் சேனலில் மே ஒன்று முதல் திங்களில் இருந்து சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தத் தொடரை மீண்டும் பார்க்க ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.