எச்சரித்த திருமா, பா ரஞ்சித்தின் அடுத்த நகர்வு.. சினிமாவை மிஞ்சிய ஆம்ஸ்ட்ராங்கின் கொலை

VCK – Pa Ranjith: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இந்த வழக்கில் சிக்குபவர்கள் அத்தனை பேருமே முக்கிய கட்சிகளின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.

திமுக நிர்வாகி, அதிமுக நிர்வாகி, பாஜக நிர்வாகி, தாமக நிர்வாகி என கொத்துக்கொத்தாய் குற்றவாளிகள் சிக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இதுவரைக்கும் கொலைகாண உண்மையான நோக்கம் வெளியாகவில்லை என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று இயக்குனர் பா ரஞ்சித் ஆளும் கட்சிக்கு எதிராக சில விஷயங்களை பேசி இருந்தார். அதை தொடர்ந்து நேற்று இரவே விடுதலை சிறுத்தை சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் சிதம்பரம் தொகுதி எம் பி திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையை சில அர்ப்பர்கள் தங்களுக்கு சாதகமாக பார்க்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் பற்றியால் நடத்தப்படும் பேரணி, வீரவணக்கம் போன்ற நிகழ்வுகளில் தான் அந்த கட்சியைச் சார்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

ஒரு வேலை அவர் இயக்குனர் பா ரஞ்சித்தை தான் சொல்கிறாரோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழும்பி இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொருத்தவரைக்கும் திருமாவளவன் மற்றும் பா ரஞ்சித் இருவருக்கும் இடையே வித்தியாசமான கருத்து இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த கொலை வழக்கை உச்சநோக்கினால் வடசென்னை, மெட்ராஸ் போன்ற படங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு பக்கம் 1997இல் படுகொலை செய்யப்பட்ட தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி மலர்க்கொடி தற்போது இந்த கேசில் கைதாகி இருக்கிறார்.

அப்போது நடந்த மரணத்திற்காக 2021 ஆம் ஆண்டு தோட்டம் சேகரின் மகன், மயிலை சிவா என்பவரை கொலை செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கைதாகி இருக்கும் திமுக நிர்வாகி அருள் ஆற்காடு சுரேஷ் மைத்துனர்.

மேலும் வழக்கு விசாரணையில் சிக்கி இருக்கும் பாஜக நிர்வாகி அஞ்சலை ஆற்காடு சுரேஷ் காதலி. பழிக்குப் பழி என்ற பெயரில் தமிழ்நாட்டில் தொடர் கொலைகள் நடைபெற்று வருவது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

- Advertisement -