ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அம்பேத்கர் விழாவில் பங்கு பெறாத திருமாவளவன்.. விஜய்யால் எடுத்த முடிவா.?

Vijay : விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான திருமாவளவன் அம்பேத்கரின் விழாவில் பங்கு பெறவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றக்கூடியவர் தான் திருமாவளவன். இந்த சூழலில் விஜய் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நூல் வெளியிடுகிறார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் சென்னை உயர்நீதிமன்ற மோனல் நீதிபதிக்கு சந்துரு அம்பேத்கர் நூலை பெற்றுக்கொள்கிறார். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனும் கலந்து கொள்கிறார்.

அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டுடேவும் பங்கு பெறுகிறார். இந்த சூழலில் திருமாவளவன் இப்போது திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். சமீபத்தில் விஜய் திமுகவை விமர்சித்து பேசி இருந்தார். அதேபோல் திருமாவளவன் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை ஆக்கபூர்வமானது எதுவுமே இல்லை என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

அம்பேத்கர் விழாவில் பங்கு பெறாத திருமாவளவன்

இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் விஜய்யுடன் ஒரே நிகழ்ச்சியில் ஒரே மேடையில் தோன்றினால் இதனால் கற்றுக்கொள் பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அம்பேத்கரின் நிகழ்ச்சியை திருமாவளவன் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்து அம்பேத்கரின் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பி வந்த திருமாவளவன் இப்போது அவரின் நிகழ்ச்சியை அவமதிப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. விஜய்யால் தான் இந்நிகழ்ச்சியை அவர் தவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் திருமாவளவன் இவ்விழாவில் கலந்து கொண்டால் அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் சத்தமே இல்லாமல் இதிலிருந்து விலகி இருக்கிறார்.

Trending News