திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

தமிழ் கடவுளை பற்றி கேவலமாகப் பேசிய திருமாவளவன்.. பெரும் சர்ச்சையை கிளப்பிய கருத்துக்கள்!

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அரசியல் களம் தற்போது  சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏனென்றால் அவரவர் கட்சிக்காகவும், கூட்டணி கட்சிகளும், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரத்தின் போது தமிழ் கடவுளைப் பற்றி விமர்சித்திருருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏனென்றால் திருமாவளவன் தனது பிரச்சாரத்தின் போது, ‘முருகனை தமிழ் கடவுள் என்று சொல்லி தைப்பூசத்திற்கு மட்டும் அரசு விடுமுறை விட்டுவிட்டால், நாம் அனைவரும் தமிழர்களாக தலை நிமிர்ந்து விடுவோமா? என்றும், முருகன் தமிழ் கடவுள் என்றால், அவருடைய அண்ணன் விநாயகரும் தமிழ் கடவுளாக தான் இருக்கவேண்டும்.

ஆனால் ஏன் நாம் அவரை தமிழ் கடவுள் என்று சொல்லவில்லை. என்னமோ  இது ஒரு கட்டுக்கதை இருக்கிறது. ரெண்டு பேரும் அண்ணன் தம்பி, ஒரு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகனாய் இருவரும் பிறந்திருக்கிறார்கள்.

thirumavalavan-cinemapettai

மேலும் சிவனுக்கு ரெண்டு மனைவியோ, மூன்று மனைவியோ இருந்தாலும் கூட இரண்டு பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள். இரண்டு பேரில் ஒருவன் தமிழ் கடவுள், இன்னொருவன் இந்தி கடவுளா? ஏன் விநாயகரை தமிழ் கடவுள் என்று நாமும் சொல்லவில்லை, அவர்களும் சொல்லவில்லை.

எனவே  எல்லாம் ஓட்டுக்காக, அந்த அடிப்படையில் நாம் போனால் கூட அவர்களின் வழியில் சிக்கிக் கொள்வோம்’ என்று திருமாவளவன் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News