Sun Tv Serial Director Thirumurugan: சின்னத்திரை பொருத்தவரை சில சீரியல்களை மறக்கவே முடியாது. மறுபடியும் அந்த மாதிரியான ஒரு கதை களத்தை பார்க்க மாட்டோமா என்று சில சீரியல்கள் இப்பொழுது வரை ஏங்கவைத்து வருகிறது. அதில் இயக்குனர் திருமுருகன் இயக்கிய பல சீரியல்கள் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் டிடி பொதிகை சேனல் ஆரம்பித்த காலத்தில் கோகுலம் காலனி, நல்லூர் காவல் நிலையம் என இரண்டு மெகா ஹிட் சீரியல்களை கொடுத்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக தான் சன் டிவி, ராஜ் டிவி என பல சேனல்களில் தொடர்ந்து சீரியல்களை இயக்கி இருக்கிறார். அத்துடன் 2002 ஆம் ஆண்டு தொடங்கிய மெட்டி ஒலி சீரியல் இப்பொழுது வரை மறக்க முடியாத ஒரு காவியமாக இடம்பெற்று இருக்கிறது. இந்த நாடகம் மட்டும் இல்லாமல் நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற வெற்றி சீரியல்களை தொடர்ந்து கொடுத்து இருக்கிறார்.
அந்த வகையில் மறுபடியும் இவர் இயக்கத்தில் ஒரு சீரியல் வராதா என்று மக்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் இவருடைய சீரியல் எப்படியும் வந்துவிடும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அது ஏமாற்றமாகவே போய்விட்டது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்திலேயே திருமுருகன் அவருடைய யூடியூப் சேனல் மூலம் ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
அதில் அவருடைய வெற்றி நாடகங்களை ஒரு தொகுப்பாக போட்டுவிட்டு கூடிய விரைவில் 2025 ஆம் ஆண்டு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதனால் இந்த வருடம் நிச்சயம் திருமுருகன் இயக்கப் போகும் புத்தம் புது ஒரு நாடகம் வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது.
ஆனால் அது மெட்டிஒலி இரண்டாம் பாகமோ அல்லது மற்ற வெற்றி நாடகங்களின் தொடர்ச்சியாகவோ இருக்க போவதில்லை. புத்தம் புது மண்வாசனையுடன் திருமுருகன் அவருடைய பாணியில் அடி எடுத்து வைக்கப் போகிறார். அதே மாதிரி அவருடைய சேனல் தொடர்ந்து சன் டிவியில் தான் ஒளிபரப்பாக போகிறது.
அந்த வகையில் ஏற்கனவே சன் டிவி சேனலில் பல சீரியல்கள் ஹிட் ஆகி டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலித்து வருகிறது. இதனை v இன்னும் மெருகேற்றும் விதமாக தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலும், ரோஜா 2 சீரியலுக்கும் அஸ்திவாரத்தை போட்டு விட்டார்கள். இதனை தொடர்ந்து கோபி என்கிற திருமுருகன் இயக்கப் போகும் புத்தம்புது சீரியலும் களமிறங்க போகிறது.