திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இனி அடுத்த எதிர்நீச்சல் குணசேகரன் இவர் தான்.. மாரிமுத்து சாயலில் இருப்பதால் திருச்செல்வம் எடுக்கும் முடிவு

Ethirneechal-Marimuthu: டிஆர்பி-யில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளது. ஆதி குணசேகரனாக மிரள வைத்த மாரிமுத்து இன்று மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்று பலரும் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

Also read: 57 வயது எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரையுலகம்

அதன் காரணமாகவே இப்போது சில நடிகர்களின் பெயர்கள் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்ற செய்தியும் மீடியாவில் பரவி கொண்டிருக்கிறது. ஒரு சிலர் எத்தனை பேர் வந்தாலும் அவருக்கு ஈடாக மாட்டார்கள் என்று வேதனையுடன் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும் அவரால் தான் மாரிமுத்து இடத்தை நிரப்ப முடியும் என்று நினைக்கும் படியான ஒரு பிரபலமும் இருக்கிறார். அவர் தான் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான 5 வில்லன்கள்.. ஈடு கொடுக்க முடியாத மாரிமுத்துவின் இடம்

நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு சாயலில் பார்ப்பதற்கு மாரிமுத்து போல் இருப்பார். அதனாலேயே இவரை அணுக தற்போது இயக்குனர் திருச்செல்வம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மாரிமுத்து-வேல ராமமூர்த்தி

marimuthu-vela ramamoorthy
marimuthu-vela ramamoorthy

பிசியான நடிகராக இருக்கும் இவர் மாரிமுத்துவுக்காக இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சேனல் தரப்பு விரைவில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிகாரப்பூர்வமான செய்தியையும் வெளியிட இருக்கின்றனர்.

Also read: துக்கம் தொண்டை அடைக்க செய்த 5 மாரடைப்பு மரணங்கள்.. விவேக் முதல் மாரிமுத்து வரை

Trending News