புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஏலியனாக நடித்தது இவரா.? சிவகார்த்திகேயனோடு சம்பவம் செய்த உண்மையான நடிகரின் புகைப்படம்

Sivakarthikeyan-Ayalaan: ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் அயலான் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. பல வருடங்களாக இழுத்தடித்து வந்த இப்படம் சயின்ஸ் பிக்சன் முறையில் ஏலியன் சம்பந்தப்பட்ட கதையாக இருப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு வித்திட்டுள்ளது.

அதற்கேற்றார் போல் ஏ ஆர் ரகுமானின் இசையும் ஆவலை தூண்டி இருக்கிறது. சமீபத்தில் இதன் டீசர் மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது. அதில் ஏலியன் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் குழந்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருந்தது.

அந்த வகையில் சவாலான இந்த கேரக்டரில் நடித்த நடிகர் யார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இது நாள் வரை இந்த விஷயம் மிகவும் சீக்ரெட்டாக இருந்த நிலையில் வெங்கட் செங்குட்டுவன் என்ற நடிகர் தான் அதில் நடித்துள்ளார் என தெரிய வந்திருக்கிறது. இவர் தற்போது காம்ப்ளக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

லவ் டுடே ஹீரோயின் இவானா தான் இதில் நாயகி. ஆனால் அப்படம் வெளிவருவதற்கு முன்பே அயலான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த வருட தீபாவளிக்கு இப்படத்தை எதிர்பார்த்த நிலையில் சிஜி வொர்க் உள்ளிட்ட பணிகள் தாமதம் ஆனதால் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்க இந்த ஏலியன் வர இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் வெளிவந்த மாவீரன் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சூப்பர் ஹீரோ பாணியில் ஃபேண்டஸியாக வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து அயலானும் இதுவரை இல்லாத ஒரு கதையுடன் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

அதாவது ஏலியன் பற்றி பெரிய அளவில் எந்த படங்களும் இதுவரை வந்தது கிடையாது. அதனாலேயே ஒட்டுமொத்த ரசிகர்களும் இதற்காக தற்போது காத்திருக்கின்றனர். அந்த வகையில் ஏலியனாக சிவகார்த்திகேயனோடு சம்பவம் செய்யப்போகும் நடிகரும் யார் என்று தெரிந்ததில் அந்த ஆர்வம் இன்னும் அதிகமாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏலியனாக நடித்த வெங்கட் செங்குட்டுவன்

ayalaan-alien
ayalaan-alien

Trending News