ஜோசப் விஜய் அவர்களே.! அடுத்த வடிவேலு ரெடி, ஸ்கெட்ச் போட தயாரான தளபதி விசுவாசிகள்

Vijay: விஜய் தன்னுடைய அரசியல் அறிவிப்பை அறிவித்ததில் இருந்து களம் பரபரப்பாக மாறி இருக்கிறது. அதிலும் அவருடைய முதல் மாநாட்டில் தொடங்கி சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம் வரை எல்லாமே பரபரப்பு செய்தி தான்.

எங்கே அவருக்கு ஆதரவு கூடி விடுமோ என்ற பயத்தில் அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து அவரை எதிர்த்து வருகின்றனர். ஆனால் என்னுடைய டார்கெட் வேற என்று ரீதியில் விஜய் செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் அவருடைய ரசிகர்களும் விசுவாசிகளும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். அதில் தற்போது போஸ் வெங்கட் சிக்கி இருக்கிறார்.

ஏற்கனவே அவர் விஜய் அரசியலுக்கு வந்ததை கடுமையாக விமர்சித்து இருந்தார். தன்னுடைய சோசியல் மீடியா பதிவிலும் கூட காட்டமான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

அடுத்த வடிவேலு ரெடி

இந்நிலையில் அவர் ஜோசப் விஜய் அவர்களே 15 வயதில் நீங்கள் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க. தமிழகத்தில் மன்னராட்சி நடக்குதுன்னு சொல்றீங்க.

ஆமா எங்க தலைவர் முடிசூடா மன்னன். குடும்ப அரசியல்ன்னு சொல்ற நீங்க சினிமா வாரிசு தானே என விஜய்யை கடுமையாக எதிர்த்து பேசி இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகும் நிலையில் தளபதியின் விசுவாசிகள் சும்மா இருப்பார்களா. ஆகா அடுத்த வடிவேலு ரெடி என போஸ் வெங்கடை வச்சு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜயகாந்தை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பேசி பல சிக்கலில் சிக்கினார். அதனால் அவருடைய சினிமா வாழ்வு முடங்கியது.

அதிலிருந்து தற்போது வரை மனுஷன் மீளவே இல்லை. அப்படி ஒரு நிலை போஸ் வெங்கட்டுக்கு வரப்போவது உறுதி என தாவெக தொண்டர்கள் அவரை எச்சரித்து வருகின்றனர்.

மேலும் இந்த கதறல் பத்தல, எவ்வளவு வேணாலும் இப்ப பேசுங்க. ஆனா 2026ல மக்கள் முடிவு என்னன்னு தெரியும் என பல்வேறு கமெண்ட்டுகள் குவிகிறது.

இப்படியாக தொடர்ந்து அரசியல் களம் அனல் பறக்கிறது. இதில் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் நிச்சயம் எதிர்பாராததாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment