வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நயன்தாரா மாதிரி குருட்டு அதிர்ஷ்டம் எல்லாம் இல்ல.. ரியல் லேடி சூப்பர் ஸ்டாரின் 1000 கோடி வசூல் ரகசியம் இதுதான்

Actress Nayanthara: தற்போது நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இது அவருடைய உழைப்பா அதிர்ஷ்டமா என்று கேட்டால் குருட்டு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது அவர் நடிப்பில் கை தேர்ந்தவராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சந்திரமுகி பட வாய்ப்பு மட்டும் வரவில்லை என்றால் இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் அவருக்கு இல்லை.

தமிழில் அறிமுகமான பின் 2வது படமே ரஜினிக்கு ஜோடி என்றால் அது அதிர்ஷ்டம் மட்டும் தான். ஆனால் பல தோல்விகளைக் கடந்து இன்று ஹீரோவுக்கு நிகரான அந்தஸ்துடன் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.

ரியல் லேடி சூப்பர் ஸ்டார் ரம்யா கிருஷ்ணன்

ஆரம்ப காலத்தில் கவுண்டமணி உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை மறந்தே போனார். பல தோல்விகளை தாண்டி வந்த இவருக்கு படையப்பா திருப்புமுனையாக அமைந்தது.

நீலாம்பரியாக கொண்டாடப்பட்ட இவர் இன்று ராஜமாதாவாக ஒரு அந்தஸ்தை பிடித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய மிரட்டல் நடிப்பும் திறமையும் தான்.

அதுவே தோல்வி பட நாயகி ராசியில்லாத நடிகை என்ற பிம்பத்தை மாற்றி அமைத்தது. அதன் மூலம் 1000 கோடி வசூல் பெற்ற பாகுபலியில் இவரும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார்.

தற்போது பல படங்களில் இவர் பிஸியாக நடித்தாலும் இப்படத்தின் ராஜமாதாவை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இதுவே அவர் சேர்த்து வைத்த மிகப்பெரும் சொத்தாக இருக்கிறது.

Trending News